ஏரியா லிட்ரேச்சர்வாழ்க்கை கூட ட்ராவல்டா!

ஐஸ் ஹவுஸ் அண்ணாத்தே அக்கா வூடு
வந்தாச்சி டுமீல் குப்பம் டேவிட்டு
மீர்சாகிப்பேட்டை மார்க்கெட்டு
எல்லாரும் எறங்கிக்கோ
போலாம் ரைட்டு
கெளம்பிக்கோ
போலாம் ரைட்...
போலாம் ரைட்..!

அயோத்திக் குப்பம்
ஆண்டாளு
ஆசைப்பட்டான்
மன்னாரு
கண்ணும் கண்ணும்
மோத
காதல் இங்கே
வெடிக்குது
வெடிச்ச காதல்
வேதனைடா
வெத்தலை போல
வாடுது
வாழ்க்கை கூட
ட்ராவல்டா
வாழ்ந்தவனுக்கு
தெரியும்டா
அவனவன்
ஸ்டாப்பிங் வந்தா
அப்பீட்டு உடணும்
தெரிஞ்சுக்கோ
நீயும் நானும் பயணி - அட
வாழ்க்கையைதான் கவனி!
 

 சீத்தலைப் பாட்டனார்