செம காரம்!ரீடர்ஸ் வாய்ஸ்

வெக்கேஷன் ரொமான்சை இன்ஸ்டாமில் பகிர்ந்த சமந்தாவுக்கு தில் ஜாஸ்தி!
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; கைவல்லியம், மானகிரி.

அரேபிய குதிரை வேகத்தில் தமிழுக்கு வந்துள்ள டயானா எரப்பாவின் இஞ்சி மரப்பா ஸ்டில்கள் செம காரமப்பா..!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி; சத்தியநாராயணன், அயன்புரம்.

போலீஸ் தேர்விலும் குளறுபடி என்பது ஊழல் கரையான் அரசின் முக்கிய சேவை அமைப்பை தின்றுகொண்டிருப்பதற்கு பிராக்டிக்கல் சாட்சி.
- பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்; முரளிதரன், மதுரை; முருகேசன், கங்களாஞ்சேரி; சைமன்தேவா, விநாயகபுரம்; வண்ணை கணேசன்,  பொன்னியம்மன்மேடு.

பதினேழு லட்சம் மாணவர்களின் மனம் நிறையும்படி அமுது படைக்கும் அக்‌ஷய பாத்ராவின் தொண்டு பிரமிப்பு.
- கைவல்லியம், மானகிரி; முரளிதரன், மதுரை; மயிலை கோபி, அசோக்நகர்; நஞ்சையன், பொள்ளாச்சி.

பாஜகவின் ஊழல் எதிர்ப்பு முகமூடியைக் கிழித்தெறிந்த ரஃபேல் கட்டுரை, அபாரம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; மனோகா, திருச்சி; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.

மலிவுவிலை வாஷிங்மெஷினை உருவாக்கிய சாதனையாளர் முருகேசன், நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்கிறார்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; கைவல்லியம், மானகிரி; மயிலை கோபி, அசோக்நகர்; ரவிக்குமார், கோவை.

‘தலபுராண’த்தில் சுகுண விலாச சபா பற்றி படித்த தகவல்கள் வியக்கவைத்தன.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சந்திரமதி, சென்னை.

லண்டனில் சோஃபாதான் பிடிச்சது என்று சொன்ன கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகமேதான்.
- கைவல்லியம், மானகிரி; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; ஜெசி, சென்னை.

தேங்காய் எண்ணெய் மாரடைப்பு தருமா? ஷாக் ஆராய்ச்சியாக இருக்கேப்பா!
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி; ஜெர்லின், ஆலந்தூர்.

‘ஹோம் அக்ரி’யில் மூலிகைகளைப் பற்றி துல்லியமாக அறிந்திருந்த சித்தர்களின் அறிவு மலைக்க வைத்தது.
- சரண்சுதாகர், வேளச்சேரி.

தக்காளி சேர்க்காமல் மாமிசம் எளிதாக செரிக்க உதவும் அக்கறை மற்றும் பக்குவத்தில் உருவாகும் திண்டுக்கல் சிவா பிரியாணி, சூப்பர்  சுவை.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி; சாந்தா, மதுரை: லக்‌ஷித், மடிப்பாக்கம்.

52 வயசு பெண் பாடிபில்டர் நிஸ்‌ரின் பரிக் செய்தி அசத்தல்.
- ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; மியாவ்சின், கே.கே.நகர்.

சைக்கிள் பயணத்தால் காசும் மிச்சம், ஆரோக்கியமும் மேம்படும்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்; முருகேசன், கங்களாஞ்சேரி; ஜெயச்சந்திரபாபு, சென்னை.