பொன் மாலை!
தமிழில் அசுர வில்லனாக அறிமுகமான அனுராக் காஷ்யப்பிற்கு கம்பீரக் குரலால் உயிர்கொடுத்த இயக்குநர் மகிழ்திருமேனியின் பேட்டி சூப்பர். - முத்துவேல், கருப்பூர்; நிலவழகு, நீலாங்கரை.
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பதக்கங்களைத் தட்டி இந்தியாவை உயர்த்திய வீரர்களை அறிமுகப்படுத்திய ‘கோல்டன் இந்தியன்ஸ்’கட்டுரை, பொன் மாலை. - த.சத்தியநாராயணன், அயன்புரம்; முரளி தரன், மதுரை; வளையாபதி, தோட்டக்குறிச்சி; முத்துவேல், கருப்பூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சங்கரநாராயணன், திருநெல்வேலி.
சாமி ஸ்கொயர் இயக்குநர் ஹரியின் அதகள பேட்டி மிரட்டல். - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; முரளிதரன், மதுரை; சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சங்கீதசரவணன், மயிலாடுதுறை; நடராஜன், திருமுல்லைவாயில்.
கற்பனை கதாபாத்திரமான குயிலி எதிர்காலத்தில் ஏற்படுத்தவிருக்கும் சாதிமோதல் அபாயத்தை எச்சரித்த சமூக ஆய்வாளர் மயில்வாகனனின் தகவல் ஆச்சரிய அதிர்ச்சி. - பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்; பூதலிங்கம், நாகர்கோவில்; ஜெசி, சென்னை.
அசாம் கலாசாரத்தை சினிமா வழியாக உலகுக்குக் கூறமுயலும் ரிமாதாஸின் திரைப்படங்களை இருகரம் கூப்பி வரவேற்கலாம். - சம்யுக்தா சுதாகர், சென்னை.
கிரிக்கெட் பொருட்களை சேகரித்து வரும் ஜே.கே. மகேந்திரன் முயற்சிக்கு இனிய பூங்கொத்து. - இனியா, கங்களாஞ்சேரி.
கணவரான நாகசைதன்யா படத்தை ரீஷூட் செய்த சமந்தாவைப் பாராட்டி அடுத்த இன்டர்வியூவுக்கு ரூட் போட்டுட்டீங்களே ப்ரோ! -மயிலை கோபி, அசோக்நகர்: முத்துவேல், கருப்பூர்.
சேப்பாக்கம் மாளிகை பற்றிய செய்திகள் பிரம்மாண்ட பிரமிப்பு. - த.சத்தியநாராயணன், அயன்புரம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
சீரியலுடன் விவசாயமும் செய்து வரும் தங்கபாண்டியன் முயற்சி சிறக்கட்டும். -மு.இனியா, கங்களாஞ்சேரி; பூதலிங்கம், நாகர்கோவில்.
பாரதியார், நேரு, காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை மயக்கிய நெல்லை சந்திரவிலாஸ் தோசைக்கதை சூப்பர் சுவை. - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; வரலக்ஷ்மி முத்துசாமி, கொளத்தூர்; தேவா, கதிர்வேடு; ராமகண்ணன், திருநெல்வேலி; மைதிலி, கங்களாஞ்சேரி; ஜெயச்சந்திரபாபு, மடிப்பாக்கம்;
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய முகநூல் நண்பர்களின் உதவி மகத்தானது. - முருகேசன், கங்களாஞ்சேரி; ராஜ்குமார், குன்னூர்; சைமன்தேவா, விநாயகபுரம்.
- ரீடர்ஸ் வாய்ஸ்
|