COFFEE TABLE
* டூ இன் ஒன்
டோலிவுட்டின் பிஸி பொண்ணு தமன்னா. அங்கே அடுத்த ஜூன் வரை அவரது கால்ஷீட் டைரி ஃபுல். விஷயம் இதுவல்ல... இப்போது யோகாவில் கவனம் செலுத்தி வரும் தம்ஸ், அவுட்டோரில் யோகா செய்ய நேரமின்மையால், கிடைத்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்கிறார். ஹேர் ஸ்டைலிங், மேக்கப் பிரேக் இடையே அவர் யோகா பண்ணும் இனிய மொமன்ட்டை வீடியோவாக இன்ஸ்டாவில் தட்டிவிட, 8 லட்சம் லைக்குகளை அள்ளிவிட்டது அந்தப் பதிவு.
* குழந்தைத் திருமணம்
‘‘இந்தியாவில் இன்னமும் குழந்தைத் திருமணம் கனஜோராக நடந்துகொண்டிருக்கிறது...’’ என்று அதிர்ச்சியளிக்கிறது மத்திய அரசின் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு.‘‘பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்துவதுதான் இதற்கு முதன்மையான காரணம். திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண் குழந்தைகளில் 30% பேர் பள்ளிக்கூட வாசலைக் கூட எட்டிப் பார்க்காதவர்கள். 21% பேர் ஐந்தாம் வகுப்புடன் நின்றுவிட்டவர்கள். பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் வெறும் 2.4% பேர் மட்டுமே...’’ என்கிறது அந்த அமைப்பின் ஆய்வறிக்கை.‘‘பெண் குழந்தைகளுக்கு மேல்நிலைக் கல்வி வரை கட்டாயமாக்குவதுதான் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க நமக்கிருக்கும் ஒரே வழி...’’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
* கின்னஸுக்கெல்லாம் கின்னஸ்
இந்த உலகில் யாருமே செய்யாததைச் செய்து ‘கின்னஸ்’ ரெக்கார்டில் இடம் பிடித்து கெத்து காட்டுவது பலரின் வாடிக்கையாகிவிட்டது. இப்போது வளர்ப்புப் பிராணிகளும் கின்னஸ் சாதனை களைச் செய்து பலரின் கவனத்தையும் ஈர்த்துவருகின்றன. அந்த வகையில் மலேசியாவைச் சேர்ந்த ‘பிபி’ என்ற பூனை தன் பாதத்தில் ஒன்பது பிளாஸ்டிக் பகடைக் காய்களைக் கீழே விழாமல் நான்கு நிமிடங்களுக்குத் தாக்குப்பிடித்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. இச்சாதனையை ‘கின்னஸுக்கெல்லாம் கின்னஸ்’ என்று வர்ணித்துவருகிறார்கள் ரசிகர்கள்.
* லேட்டஸ்ட் போன்
ஐபோனுக்கு போட்டியாக ‘ஓப்போ’ நிறுவனம் ‘எஃப் 9’ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 6.30 இன்ச் டிஸ்பிளே, 16 எம்பி செல்ஃபி கேமரா, 16 எம்பி பின்புற கேமரா, 64 ஜிபி ஸ்டோரேஜ், 3500mAh பேட்டரி திறன், 4ஜிபி ரேம் என்று லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் களமிறங்கியிருக்கிறது ‘ஓப்போ’. நான்கு வண்ணங்களில் மெலிதாக இதை வடிவமைத்திருக்கிறார்கள். அறிமுக ஆஃபர் விலை ரூ.19,990.
* கிளாமர் கைஃப்
பாலிவுட்டில் இப்பவும் ஹாட் கேக்காக மிளிர்கிறார் காத்ரினா கைஃப். அமீர்கானுடன் ‘தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’, ஷாருக்குடன் ‘ஜீரோ’, சல்மானுடன் ‘பாரத்’ என வரிசையாக டாப் ஹீரோக்களின் படங்களை கைவசம் வைத்திருக்கும் கைஃப், லேட்டஸ்ட்டாக கிளாமர் போட்டோ ஷூட் ஒன்றை செய்திருக்கிறார். இளமை குலுங்கும் அந்த ஷூட்டிலிருந்து சில தரிசனங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட, லட்சக்கணக்கான லைக்குகளைக் கடந்து வைரலாகி வருகின்றன அந்த குலுங்கும் புகைப்படங்கள்.
- குங்குமம் டீம்
|