‘அந்த’ இடத்தில் ஆபத்து!



சீனாவின் தெற்குப்பகுதியிலுள்ள சான்யா கடற்கரையில் இளைஞர் ஒருவர் தன் சகாக்களுடன் நீச்சலடிக்கச் சென்றார். ஜாலியாக அலையோடு விளையாடி குளித்தார். திடீரென ‘அந்த’ இடத்தில் சுருக்கென வலி, எரிச்சல். குனிந்து பார்த்தால், சுறா வகையைச் சேர்ந்த ஸ்டிங்ரே வகை மீன், ‘அந்த’ இடத்தில் மிகச்சரியாக ஹேங்கரில் சட்டை போல மாட்டியிருந்தது!

வலி பொறுக்க முடியாமல் புத்தர் முதல் கர்த்தர் வரை உதவிக்கு அழைத்தவரை தீயணைப்புப் படை வீரர்கள் ஸ்பாட்டுக்கு வந்து காப்பாற்றினர். வேதனையில் மணலில் புரண்டு தவிக்கும் அந்த இளைஞரின் போராட்ட வீடியோவை ஐந்து மில்லியன் பேர் சமூகவலைத்தளத்தில் பார்த்து லைக் செய்துள்ளனர்! இளைஞர் காப்பாற்றப்பட்டார். மீன்? இறந்துவிட்டது!    

- ரோனி