அலமாரியில குற்றவாளி!



காணவில்லை என்று கூறப்பட்ட போதைப்பொருள் குற்றவாளியை அவரது வீட்டின் அலமாரியிலிருந்து போலீசார் கண்டுபிடித்து ஷாக் ஆகியுள்ளனர்! 2011ம் ஆண்டு முதலாக தில்லி - காசியாபாத் பார்டரில் போதைப்பொருட்களை விற்று வந்த குலாப்சிங் மீது கொலைவழக்கு உள்ளிட்ட க்ரைம் கேஸ்கள் உண்டு. அவரை போலீஸ் விசாரணையிலிருந்து மீட்க அவரது மனைவி அஞ்சு ஒரு காரியம் செய்தார். கான்ஸ்டபிள் அஜய் சங்கர் தன் கணவரைக் கடத்திவிட்டதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகாரளித்தார்!

உடனே காவலர் அஜய் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டாலும் குலாப்சிங்கை காவலர் அஜய் கடத்தியதற்கான எந்தத் தடயமும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை. ஓராண்டு அலைச்சலுக்குப் பிறகு எஸ்.பி மவுரியா உத்தரவின் பேரில் குலாப்சிங் வீட்டில் திடீர் ரெய்டு நடத்தியபோது அலமாரியில் ஓராண்டாக மறைந்து வாழ்ந்த குலாப் பிடிபட்டார். இதற்கு மனைவி அஞ்சுவும், மகனும் உடந்தை! “கடந்த ஆண்டு காவலர் அஜய் என்னை பலமணிநேரம் விசாரித்து டார்ச்சர் செய்தார். அவரைப் பழிவாங்கவே இப்படிச் செய்தோம்!” என்று பதில்
கூறியிருக்கிறார் குலாப்சிங்.

- ரோனி