தங்க டிபன் பாக்சில் சோறு!



ஹைதராபாத்திலுள்ள நிஜாம் மியூசியத்தில் திருடுபோன தங்க டிபன்பாக்ஸை போலீஸ் அரும்பாடுபட்டு மும்பை வரை சேசிங் செய்து மீட்டுள்ளனர். இந்த நிஜாம் மியூசியம், தங்கம், வெள்ளி, மரகதம், ரூபி என தொன்மையான பொருட்களைக் கொண்டது. கடைசி ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் அலிகான் மற்றும் அவரது தந்தை பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள் ஆகியவையும் அங்கு உள்ளன.

அங்கு வென்டிலேட்டர் உடைத்து உள்ளே என்ட்ரியான முகமது கௌஸ், பாஷா, முகமது முபீன் ஆகிய தோஸ்த்துகள் தங்க டிபன்பாக்ஸ், மரகதம், ரூபி கற்களைத் திருடிக்கொண்டு மும்பைக்கு தப்பினர். சிசிடிவி வீடியோவை துல்லியமாகப் பார்த்து இவர்களை போலீஸ் ரவுண்ட் அப் செய்து மடக்கியது.  விசாரணையில், நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி தினசரி தங்க டிபன்பாக்ஸில் மீல்ஸ் சாப்பிட்டு மகிழ்ந்த கதை வெளியாகி உள்ளது! தங்கத்தட்டில் சோறு திங்க யாருக்குத்தான் ஆசை இல்லை?!

- ரோனி