மாணிக்கம்!
ரீடர்ஸ் வாய்ஸ்
நடிப்பில் ஸ்கோர் செய்யத் துடிக்கும் யூத் குலோப்ஜாமூன் ராஷி கண்ணா செம ரவுண்டு வர வாழ்த்துகள்! - த.சத்தியநாராயணன், அயன்புரம்; நிலவழகு, ஆலந்தூர்; தேவா, கதிர்வேடு; ஜெர்லின், மீனம்பாக்கம்; வண்ணை கணேசன், பொன்னி யம்மன்மேடு: மயிலை கோபி, அசோக்நகர்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
மக்களோடு மக்களாக நிவாரணப்பணியில் ஈடுபட்ட கலெக்டர் ராஜமாணிக்கம், ஒளிவீசும் மாணிக்கம்தான். - டி.முருகேசன், கங்களாஞ்சேரி; ராஜ்குமார், குன்னூர்; நஞ்சையன், பொள்ளாச்சி; முரளி தரன், மதுரை; மாணிக்கவாசகம், கும்பகோணம்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
தமிழ்சினிமாவில் குறிஞ்சிமலராக ‘மேற்குதொடர்ச்சி மலை’ சினிமாவை உருவாக்கியுள்ள லெனின்பாரதியின் சமூக அக்கறை வியக்க வைக்கிறது. - சங்கீதசரவணன், மயிலாடுதுறை; மனோகர், கோவை; முருகேசன், கங்களாஞ்சேரி; நடராஜன், திருமுல்லைவாயில்; லிங்கேசன்,மேல கிருஷ்ணன்புதூர்; லட்சுமி நாராயணன், வடலூர்; ராஜ்குமார், குன்னூர்.
ஜெயராஜின் படங்களைப் போலவே அவரது எழுத்தும் நச்சென இருந்தது. - அ.முரளிதரன், மதுரை; கைவல்லியம், மானகிரி; சத்தியநாராயணன், அயன்புரம்; பூதலிங்கம், நாகர்கோவில்.
மிலிட்டரி பட்டன்கள், லாந்தர் விளக்குகள், வாட்ச்சுகள் என சேமிக்கும் ஜான்மோசஸ், அதற்கு கூறிய காரணம் புதுமை. - டி.முருகேசன், கங்களாஞ்சேரி.
டென்னிஸ் உலகின் குயின் செரினாவின் தன்னம்பிக்கை கதை, லவ்லி. - த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; மயிலை கோபி, அசோக்நகர்.
கலைஞரின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மூலம் அர்ச்சகரான மாரிச்சாமியின் பேட்டி, சமத்துவ ஒளி. - மனோகர், திருச்சி.
‘அந்தப் பார்வை’, ‘கனவின் நிழல்’ தலைப்புகளில் வெளியான கவிதைகள் இதம். - எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.
அழகில் மட்டுமல்ல, வாங்கும் சம்பளத்திலும ஸ்கார்லட் ஒஸ்திதான். - மயிலை கோபி, அசோக்நகர்; அக்ஷயா, திருவண்ணாமலை.
மியூசிக்கலி ஆப்பில் மிரட்டும் அபிநய சரஸ்வதி சித்ரா அக்கா, ஆசம். - ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; மயிலை கோபி, அசோக்நகர்.
‘முந்தினநாளே வந்திடுங்க’ செம ஜாலி கதை. ரசித்துப் படித்து சிரித்தேன். - பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.
ஹெல்மெட் அவசியம் என்றாலும் அது மட்டுமே போதாது என்பது உண்மை. - மனோகர், கோவை; வளையாபதி, தோட்டக்குறிச்சி; முருகேசன், கங்களாஞ்சேரி; பிரீத்தி, செங்கல்பட்டு; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. உழைப்பு, விடாமுயற்சிக்கு நடைமுறை சாட்சியாக வாழும் சீரியல் எழுத்தாளர் ஜெகனுடைய வளர்ச்சி மகிழ்ச்சி தருகிறது. - எஸ்.பிரீத்தி, செங்கல்பட்டு.
|