coffee table
ருத்ர தாண்டவம்
சமீபத்தில் கட்டுக்கடங்காமல் ருத்ர தாண்டவம் ஆடியது பருவமழை. அதனால் உண்டான வெள்ளத்தால் இந்தியா முழுவதும் சுமார் 1400 பேர் மரணமடைந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கிறது மத்திய அரசின் ஆய்வு.இந்த கோர மழையால் கேரளாவில் மட்டுமே 488 பேர் இறந்திருக்கின்றனர். உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா, மகாராஷ்டிரா அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
படுகாயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 386. கேரளா, அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களும் இந்த மழையால் பாதிப்படைந்துள்ளன.
ஃபிட்னஸ் கேட்ஜெட்
மக்களின் ஆரோக்கியத்தையும், பர்ஸையும் மனதில் வைத்து மலிவான விலையில் ஃபிட்னஸ் டிரேக்கிங் பேண்டை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது ‘ஹானர்’ நிறுவனம். இதற்கான ஸ்பெஷல் ஆப்பை டவுன்லோடு செய்து ஸ்மார்ட்போனில் இணைத்துவிட்டால் போதும், ‘உங்கள் இதயம் ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு தடவை துடிக்கிறது, தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள், எவ்வளவு வேகமாக ஓடுகிறீர்கள்’ போன்ற தகவல்களைத் துல்லியமாகக் கொடுக்கிறது இந்த கேட்ஜெட். விலை ரூ.1,000.
ட்ரீம் கேர்ள்
டோலிவுட்டின் லேட்டஸ்ட் ட்ரீம் கேர்ள் பாயல் ராஜ்புத். அவர் நடித்த ‘ஆர்.எக்ஸ்.100’ ஹிட்டடிக்க, மளமளவென பட வாய்ப்புகள் அவருக்குக் குவிகின்றன. ஏற்கெனவே பஞ்சாபியில் நான்கைந்து படங்கள் நடித்துள்ள பாயல், இப்போது நார்த், சவுத் என திரும்பும் திசையெல்லாம் ரசிகர்களைக் கவர்ந்திழுத்து வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கிளாமர் புகைப்படம் ஒன்றைப் பதிவிட, சில மணிநேரங்களில் 70 ஆயிரம் லைக்குகளை அள்ளிவிட்டது அந்தப் புகைப்படம்.
|