பூக்கள்
மினிமினிப் பூச்சிகள் விடிந்த பின்னும் ஒளிர்கின்றன பனித்துளி.
சாலையோர மரநிழல் சற்றே இளைப்பாறுகிறது சாயங்கால வெயில்.
வற்றாத நதி கரைபுரண்டு ஓடுகிறது கத்திரி வெயில்.
வாங்க வருகிறார்கள் விற்கப்படுவதில்லையெனத் தெரிந்தும் கடற்காற்று.
குடைக்குள்ளே வர முதுகு தட்டி கேட்கிறது நனையும் மழைத்துளி.
ராஜாகுமார்
|