ராயல் போலீஸ்!மனாய் ஆசிரமத்தில் ஆசாராம்பாபு பதினாறு வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ளார். நீதிபெறும் போராட்டத்தில்  உறுதியாக உண்மையின் பக்கம் நின்று சாதித்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த டிசிபி அஜய்பால் லம்பா.

ஜோத்பூர் பட்டியல் இன நீதிமன்றம் ஆசாராம் பாபுவுக்கு ஆயுளும், அவரின் சகாக்கள் இருவருக்கு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனையையும்  விதித்துள்ளது. 2013ம் ஆண்டு மனாய் ஆசிரமத்தில் சிறுமியை சகாக்களுடன் சேர்ந்து கற்பழித்த வழக்கு இது. ‘‘சுதந்திர தினத்தன்று மைனர்  பெண்ணுக்கு நடந்த அவலம் இது. நீதிவென்றுள்ளது...’’ என நீதிபதி மதுசூதன் சர்மா தீர்ப்பளித்தபின் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளார் அதிகாரி லம்பா.

இப்போது உதய்ப்பூரில் சிறை அதிகாரியாக உள்ள லம்பாவுக்கு வழக்கு பதிவானதிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மிரட்டல் கடிதங்கள்,  நூற்றுக்கும் மேற்பட்ட அனாமதேய போன் அழைப்புகள் வழக்கைக் கைவிட லம்பாவை வற்புறுத்தியும் நேர்மையாக விசாரணை செய்து நீதியை  நிலைநாட்டியுள்ளார். கடமை கண்ணியம் லம்பா!  

ரோனி