சாணி வைத்தியம்!இந்தியர்களின் மூடநம்பிக்கைகளை லிஸ்ட் போட்டால் அது பிரிட்டானிகா தொகுப்புகளையும் பீட் செய்யும் என்பதற்கு இந்த பாம்புக்கடி வைத்தியமே  சாம்பிள்.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தேவேந்திரி என்ற பெண், சமைக்க விறகு தேடி காட்டுக்குள் சென்றபோது பாம்பு கடித்துவிட்டது. இந்த விஷயத்தை தன்  கணவரிடம் அவர் சொன்ன பிறகுதான் விபரீதம் தொடங்கியது. உடனே மருத்துவமனைக்கு தேவேந்திரியை அழைத்துச் சென்றிருக்க வேண்டும்.  மாறாக அந்தக் கணவர் கிராமத்து பூசாரியை அழைத்து வந்தார். பூசாரியின் ஆலோசனைப்படி மனைவியை படுக்கவைத்து மாட்டுச் சாணத்தை  கல்லறை ஷேப்பில் அவரது உடல் முழுக்க பூசினார். இதற்குள் விஷம் தலைக்கேறி கணவரின் கண்முன்னே தேவேந்திரி இறந்துவிட்டார்...

ரோனி