தேர்தலில் டீக்கடைக்காரர்!



டீ கடைக்காரர் என்றதும் பரிதாபப்பட்டு உச்சு கொட்ட வேண்டாம். கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாக நிற்கும் அனில்குமார், 400 கோடி  ரூபாய் சொத்துக்கு ஏகபோக அதிபதி. வீட்டில் ஏறி இறங்க மட்டும் பதினாறு கார்களை வைத்துள்ள நவீன குபேரன்.

‘‘வீட்டுவேலை செய்து எங்களைக் காப்பாற்றிய அம்மா தனக்கு சாப்பிடக் கிடைக்கும் உணவை முதலில் எங்களுக்கே கொடுப்பார்...’’ என்று கசியும்  அனில்குமார் கல்வி கற்க வறுமை தடையாக, பதினொரு வயதில் பெங்களூருவுக்கு வந்தார். கிடைத்த வேலைகளைச் செய்து காசு சேர்த்தவர், சிறிய  டீக்கடையைத் தொடங்கி கம்பெனிகளுக்கு டீ சப்ளை செய்தார். பின் 1990களில் ரியல் எஸ்டேட்டில் இறங்கி கோடிகளைக் குவித்தார். இதுதான்  அனில்குமாரின் வரலாறு. இதையே இந்திய மாநில வேட்பாளர் ஒருவரின் கதை என்றும் சொல்லலாம்!

ரோனி