கரண்ட் கட்டானால் காசு!தில்லியில் முதல் ஒரு மணிநேர மின்வெட்டுக்குப் பின் அடுத்து மின்சாரம் நிற்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மாநில அரசு உங்களுக்கு ரூ.100  அளிக்கும்!

அதாவது உங்கள் மின்சார பில்லில் நூறு ரூபாய் தள்ளுபடி! ‘‘தில்லியிலுள்ள 55 லட்சம் மக்கள், மின்வெட்டினால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும்  புரட்சிகரத் திட்டம் இது!’’ என நெக்குருகி டுவிட்டரில் எழுதியுள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இதை கவர்னர் அனில் பைஜாலும்  ஏற்றுக்கொண்டது பலரையும் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது. இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன தில்லி நகருக்கு  மின்சாரத்தை சப்ளை செய்து வரும் தனியார் மின்நிறுவனங்கள்!

ரோனி