தள்ளுபடி பெட்ரோல்!பெட்ரோல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் சுதந்திரமாக வைத்துக் கொள்ள இந்திய அரசு உத்தரவிட்டதிலிருந்து விலை ரூபாயில் ஏறி,  பைசாவில் குறைந்து நம் பர்ஸை பதம் பார்க்கிறது.

இந்நிலையில் இந்தியாவுக்கு ஆஃபர் விலையில் பெட்ரோல் வழங்க வெனிசுலா முன்வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக இப்போது இந்தியாவுக்கு 30%  விலையில் கச்சா எண்ணெய்யை விற்க முன்வந்துள்ளது. ஆனால், ‘பெட்ரோ’ எனும் கிரிப்டோ கரன்சியில் பணத்தைத் தரவேண்டும் என்பதுதான் ஒரே  கண்டிஷன்! சவுதி அரேபியாவுக்கு அடுத்து 266 பில்லியன் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை வியாபாரம் செய்வது வெனிசுலாதான். ‘‘இந்தியா பெட்ரோ  கரன்சியை ஏற்று வியாபாரம் செய்ய முன்வந்தால் இரு நாடுகளுக்கிடையே வணிகம் நடைபெறும்!’’ என்று கூறியுள்ளார் காய்ன் செக்யூர்
நிறுவனத்தின் இயக்குனரான மொகித் கல்ரா.

ரோனி