ஏசி ஹெல்மெட்!



சாதாரண ஹெல்மெட்டை கர்ச்சீஃப் உதவியுடன் தலையில் அணிந்து ரூல்ஸை காப்பாற்றுவது சரி. ஆனால், வெயில் சூட்டில் ஹெல்மெட் அணிவது பேரவதி.  இந்நிலையில்தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த கவுன்டின்யா, ஸ்ரீகாந்த், ஆனந்த் ஆகிய மூன்று மெக்கானிக்கல் எஞ்சினியர்கள் இணைந்து ஐயாயிரம் விலையில்  ஏசி ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளனர்.

2016ம் ஆண்டு பொறியியல் பட்டதாரிகளான இம்மூவரும் இதற்கு முன்பு தொழிற்சாலைக்கான ஏசி ஹெல்மெட்டை கண்டுபிடித்தவர்கள். இப்போது அதே  டெக்னாலஜியை பைக் ஹெல்மெட்டுக்கு மாற்றியுள்ளனர். இந்திய கடற்படை, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஹெல்மெட்டுகளை வாங்க  திட்டமிட்டுள்ளன!   

- ரோனி