மார்வலஸ்!



இந்தியாவின் சேரி மனிதர்களின் குடியிருப்பை கலர்ஃபுல்லாக்கும் திதீப்யா ரெட்டி பணி, அபாரம்.
- முருகன், தஞ்சை; லட்சுமி நாராயணன், வடலூர்; ப்ரீத்தி, செங்கல்பட்டு; இசக்கிபாண்டியன், சென்னை; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

மார்கோ கிரேஸ்ஸியின் ஹைப்பர் ரியலிச ஓவியங்கள் அனைத்தும் மார்வலஸ்!
- முத்துவேல், கருப்பூர்; நவாப், திருச்சி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; நடராஜன், திருமுல்லைவாயில்; குமார், விழுப்புரம்; தேவா, கதிர்வேடு.

முத்துப்பிள்ளை கேண்டீனின் சாப்பாட்டுக்கு அடிமையாகி ஆங்கிலேயர் ரூ.36 ஆயிரம் வரி கட்டியது, தமிழர் சமையலுக்கு மணிமகுடம்.
- மனோகர், கோவை; சேவுகப்பெருமாள், பெருமகளூர்; முத்துவேல், கருப்பூர்; தேவதாஸ், பண்ணவயல்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

மக்கள் அறியாத ரகசியமாக இருந்த கன்ட்ரோல் ரூம் செயல்பாடுகளை விளக்கியது அருமை.
- பி.ஜெயராஜ், சென்னை; சைமன்தேவா, விநாயகபுரம்; நம்ஷிகா, கருப்பூர்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; கைவல்லியம், மானகிரி; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

போதை ஆசாமிகளைக் கண்டித்த ‘இளைப்பது சுலபம்’ தொடர் டயட்டிற்கு அழகு!
- அஞ்சுகம், கருப்பூர்; வளர்மதி, கன்னியாகுமரி.

அறுசுவை விருந்தாய் ரசிகர்களுக்கு ஹாரர் படத்தை படைக்கும் ஆறு அத்தியாய இயக்குநர்களுக்கு வாழ்த்துகள்.
- மயிலை கோபி, அசோக்நகர்; முருகேசன், கங்களாஞ்சேரி; த.சத்தியநாராயணன், அயன்புரம்; நரசிம்மராஜ், மதுரை.

தோழர் நல்லகண்ணுவின் தியாகம், அறிவு, எளிமை, முனைப்பு ஆகியவற்றை யுகபாரதியின் எழுத்தில் வாசிக்க வாசிக்க நெகிழ்ச்சி!
- எஸ்.நவீன்சுந்தர், திருச்சி; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

சிக்கன் ஸ்டால்களை நோக்கி படையெடுத்த எங்கள் புரோட்டீன் ஆசையை உடைத்து நிஜம் சொன்ன கட்டுரை படித்து ஷாக் ஆயிட்டேன் போங்க!
- முத்துவேல்,கருப்பூர்; கைவல்லியம், மானகிரி; த.சத்தியநாராயணன், அயன்புரம்; வளையாபதி, தோட்டக்குறிச்சி; நாகராஜன், குண்டூர்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்;  சண்முகராஜ், சென்னை; பாபு கிருஷ்ணராஜ், கோவை; மாணிக்கவாசகம், கும்பகோணம்.

‘தண்ணீர் தண்ணீர்’ சிறுகதை நீரின்றி அமையாது உலகு என்று சொன்னதோடு, கருணையின் டச், ஆஹா அருமை.
- அத்விக், அசோக்நகர்; காயாதவன், அவிநாசி; ராஜ்குமார், குன்னூர்.

ஆட்டோகிராஃப் போட்டோக்களை சேமிக்கும் மதிமயங்கும்பெருமாள் உண்மையிலேயே சூப்பர் கலெக்டர்தான்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; நவாப், திருச்சி; முருகேசன், கங்களாஞ்சேரி; காந்தி லெனின், திருச்சி; ஜெரிக், கதிர்வேடு; லட்சுமி நாராயணன்,  வடலூர்.

- ரீடர்ஸ் வாய்ஸ்