ரேடியோ பேபி!



மருத்துவமனையில் அல்லது வீட்டில் அல்லது விமானத்தில் கூட குழந்தை பிறந்து கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், காற்றில் குழந்தை பிறப்பது புதுசுதானே! அமெரிக்காவைச் சேர்ந்த ரேடியோ காம்பியர் கேசிடே பிராக்டர், செயின்ட் லூயிசிலுள்ள ஆர்ச் ஸ்டேஷனில் தன் காலை ஷோவில் ஊரையே கலாய்த்துவந்தார்.  மேரேஜ் ஆகி, கர்ப்பம் தரித்த போதும் லீவ் போடாமல் ஜாலி கோழியாக வேலை பார்த்த கேசிக்கு திடீரென டெலிவரி அவசரம்.

ஷோ டைமின்போது ஹாஸ்பிடலில் இருந்தார் கேசி. அங்கேயே மைக் சகிதமாக ரேடியோகுழு செல்ல, கேசி தன் குழந்தை பிறப்பை லைவ் கமெண்ட்ரியாக தன்  ரேடியோ விசிறிகளுக்காக ஒலிபரப்பினார். கமெண்ட்ரி மட்டுமல்ல, க்யூட் செல்லத்துக்கு பெயர் சொல்லுங்களேன் என மினி போட்டியையும் நடத்தியிருக்கிறார்  கேசி!   

- ரோனி