மோடியையும் கெஜ்ரிவாலையும் இணைத்த மக்கள்!



அரசியலில் புலியும் சிங்கமுமாகத் திரிபவர்களையும் ஒரு நிமிஷத்தில் ஒன்று சேர்த்துவிடுவது பேனர் டிசைனர்களுக்கே சாத்தியம். தில்லியைச் சேர்ந்த  கணேஷ்பதக் என்ற பத்திரிகையாளர், சாலையில், தான் பார்த்த இரண்டு போஸ்டர்களையும் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார்.

சாதாரணமாகப் பார்த்தால் மோடி கேஸ் மானியத்திட்டத்தையும், கெஜ்ரிவால் தனது அரசு திட்டத்தையும் கூறுவது போலத் தோன்றும். ஆனால், கீழே இருக்கும்  மக்கள் ஒரே ஆட்கள்தான்! ஒரே மக்கள்  கூட்ட படத்தையே இரண்டு பேனர்களுக்கும் பயன்படுத்தி நேரத்தை மிச்சம் செய்திருக்கிறார் அசகாய டிசைனர்!   

- ரோனி