ட்ரம்ப் கிட்னாப்!



யெஸ். உங்களுக்கு ஷாக்காக இருந்தாலும் நிஜம் அதுதான். ட்ரம்ப்பை கிட்னாப் செய்துவிட்டார்கள் என்று தில்லி போலீசுக்கு புகார் வந்தபோது அவர்களுக்கும் பீதியானது. உண்மை என்ன தெரியுமா? தில்லியின் ரூப் நகரைச் சேர்ந்த ஒன்பது வயது நாயின் பெயர்தான் ட்ரம்ப்! பக் நாயை செக்யூரிட்டி ஓம்வீர் கருத்தாக வாக்கிங் கூட்டிச் சென்றார்.

அப்போது காரில் ஓம்வீரை ஃபாலோ செய்து வந்த இரு அபேஸ் பேர்வழிகள், ட்ரம்ப் ஆக்ரோஷமாக குரைத்து தன் எதிர்ப்பை ஹிஸ்டரியில் பதிவு செய்தும் டேக் இட் ஈஸியாக கிட்னாப் செய்துவிட்டனர்.‘கண் பார்வை குறைந்து தடுமாறும் ட்ரம்பை என்னிடம் ஒப்படைத்து விடுங்களேன்’ என தழுதழுத்த குரலில் பேசிய ஓனர், பரிசுத்தொகையாக ரூ.11 ஆயிரம் அறிவித்துள்ளார்!                

- ரோனி