உன்னதம்!



ரீடர்ஸ் வாய்ஸ்

மாற்றுத்திறனாளி சேகரின் தன்னம்பிக்கை கதை எனர்ஜி டானிக்.
- யாழினி பர்வதம், சென்னை; மனோகர், கோவை; பாக்கியவதி, கருப்பூர்; முருகேசன், திருவாரூர்; சங்கர், தூத்துக்குடி; பூதலிங்கம், நாகர்கோவில்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; ஷகிலா பானு, திரேஸ்புரம்; மூர்த்தி, பெங்களூரு; சைமன்தேவா, விநாயகபுரம்; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; நரசிம்மராஜ், மதுரை.

லைப்ரரி பெண் சசிகலாவின் குழந்தைகளுக்கு நூலகம் ஐடியா, உத்தமம் பிளஸ் உன்னதம்.
- இசக்கி பாண்டியன், சென்னை; பாபு கிருஷ்ணராஜ், கோவை; மனோகர், கோவை; முத்துவேல், பட்டுக்கோட்டை; ஜானகி ரங்கநாதன், சென்னை;
பூதலிங்கம், நாகர்கோவில்; மூர்த்தி, பெங்களூரு; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு; கைவல்லியம், மானகிரி; ஜாக்ரினா, கீழக்கரை;
யாழினி பர்வதம், சென்னை.

மிசௌரி மோலி முனியனின் ஸ்டில்களை பார்த்ததுமே பஞ்சராகுதே மனசு!
- மயிலை கோபி, அசோக்நகர்.

களையான முகம் கொண்ட ‘மதுர வீரன்’ சண்முக பாண்டியன் உயரம் தொட வாழ்த்துகள்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை; பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்; நடராஜன், திருமுல்லைவாயல்.

' அவள்', ‘ரசிப்பு’ என இரு கவிதைகளும் அமர்க்களம்.
- பிரீத்தி, செங்கல்பட்டு; சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

விமானநிலையத்தைப் பற்றி டூர், குழந்தையின் மனநிலையை நொடியில் உணர்ந்தோம்.
- ஆ.சீனிவாசன், எஸ்.வி.நகரம்; வண்ணை கணேசன், சென்னை; தேவா, கதிர்வேடு; ஜெசி, சென்னை; ஜெயா, கோவை; முருகேசன், திருவாரூர்;
மயிலை கோபி, அசோக்நகர்; சத்தியநாராயணன், சென்னை; யாழினி பர்வதம், சென்னை.

‘இளைப்பது சுலபம்’ தொடரில் இத்தனை தகவல்களா? மூச்சு வாங்குதே சார்!
- கலைச்செல்வி, திருவாரூர்.

கமலா சுந்தர ராமசாமியின் நேர்காணலில், சு.ரா.வின் இன்னொரு பக்கம் அறிந்தோம்.
- அன்பழகன், அந்தணப்பேட்டை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்; நாகராஜன், திருச்சி; பூதலிங்கம், நாகர்கோவில்: ரவி, சென்னை; அஞ்சுகம், கருப்பூர்; ராம கண்ணன், திருநெல்வேலி; பிரேமா பாபு, சென்னை.

மணல் கொள்ளை கவர்ஸ்டோரி நெஞ்சம் பதற வைத்தது.
- எஸ். நாகராஜன், திருச்சி; வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கிளி மனிதர் ஹர்ஷூக் தோபாரியா, கேமரா ஹவுஸ் சேகர் ஆகியோரின் நற்பணிகள் தொடரட்டும்.
- மனோகர், கோவை; ஜெயராஜ், சென்னை; சைமன்தேவா, விநாயகபுரம்;
முத்துவேல், கருப்பூர்.

கிஸ் அடித்தால் டைவர்ஸ் குறையுமா? இதென்னப்பா புதுப்புரளி? மரிஜுவானா சிகரெட் செய்தி அக்கிரமம் பாஸ்!
- முருகேசன், திருவாரூர்; மனோகர், கோவை; சீனிவாசன், எஸ்.வி. நகரம்.