வரிக்கு பரிசு!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதிய வரி சீர்திருத்தத்தை அமுல்படுத்திய தினத்திலிருந்து போராட்டங்கள் எட்டுத் திக்கிலும் பரவி வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த ராபர்ட் ஸ்டாங்க், கருவூலத்துறைக்கு ட்ரம்ப் பெயரில் அனுப்பிய பார்சல் மேட்டர்தான் இணையத்தில் சொடக்கு வேகத்தில் ஷேர் ஆகும் புதிய வரவு. ஏழை மக்களைத் துன்புறுத்தும் வரிக்கு எதிராக நூதனமாக போராட யோசித்த உளவியலாளரான ராபர்ட், குதிரைக் கழிவை கிலோகணக்கில் வாங்கி பார்சல் செய்துவிட்டார்.
கருவூலத்துறை இயக்குநர் நூசின் அப்போது ஆபீசில் இல்லாததால் அவமானத்திலிருந்து எஸ்கேப். ‘ட்ரம்ப் மற்றும் நூசினுக்கு கிறிஸ்துமஸ் வரிக்கான பரிசு இது’ என எழுதிய பார்சலை திறந்து பார்த்த உளவுத்துறை ஆட்கள், ராபர்ட் மேல் கேஸ் போடவில்லை. பதிலுக்கு வீட்டுக்கு போய் ‘‘உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’’ என கேட்டிருக்கிறார்கள்!
- ரோனி
|