தேவதைகள் இன்று!



தெலுங்கே இலக்கு

‘துப்பறிவாளன்’ அனு இமானுவேலின் முழு கவனமும் டோலிவுட்டில்தான். அல்லு அர்ஜுனுடன் இப்போது நடித்து வரும் படத்தின் ஷூட்டிங்கிற்காக ஐரோப்பிய நாடுகளுக்கு பறந்திருக்கிறார் அனு.

இவர்தான் சங்கமித்ரா

ஜாக்கிசானின் ‘குங்ஃபூ யோகா’, பாலிவுட்டில் ‘எம்.எஸ்.தோனி’ என சிக்ஸராக கலக்கியவர் திஷா படானி. இப்போது ‘சங்கமித்ரா’ மூலம் தமிழுக்கு வரும் திஷா, செல்லப்பிராணிகளின் செம க்யூட் காதலி. மும்பையில் உள்ள தன் வீட்டில் நாய், பூனை தவிர இரண்டு பஞ்சவர்ணக்கிளிகள் வேறு ஆசை
ஆசையாய் வளர்த்து வருகிறார்.

உதிர்த்த முத்து

பாலிவுட்டில் ‘ஜூலி2’ ரிலீஸ் என்பதால் ஹேப்பியும் டென்ஷனுமாய் படபடக்கும் ராய்லட்சுமி லேட்டஸ்டாக உதிர்த்த தத்துவம், ‘everybody loves u until u become competition’. திறமை காட்டுறவங்களுக்கு எப்பவும் போட்டி சகஜமப்பா!

அமெரிக்காவுக்குப் பறந்த நாய்

ப்ரியங்கா சோப்ரா நடித்து வரும் அமெரிக்கன் டெலிவிஷன்சீரியலான ‘குவான்டிகோ’ அங்கே செம ஹிட். அதன் மூன்றாவது சீஸன் படப்பிடிப்பிற்காக நியூயார்க் பறந்துவிட்டார் ப்ரியங்கா. கூடவே அவரது செல்ல நாய்க்குட்டி டயானா சோப்ராவையும் எடுத்துச் சென்றுள்ளார்.

ஸ்வீட் பால்

Dessert lover அமலாபாலிற்கு ஃபிளைட் டிராவல் ரொம்பவே இஷ்டம். அதிலும் ஜெட் ஏர்வேஸ் என்றால் இன்னும் குஷியாகிவிடுவார். ஜெட்டிற்கு அமலா வந்தாலே அவருக்கு கைகள் நிறைய இனிப்பு வகைகளை அள்ளிக் கொடுத்து அசத்திவிடுவதுதான் காரணமாம்.

ஸ்கூபாஷா

இடைவிடாத படப்பிடிப்பு டென்ஷன்களுக்கிடையே கிடைத்த கேப்பில் ஸ்கூபா டைவிங்கில் ரிலாக்ஸ் ஆகி ஃப்ரெஷ்ஷாகியிருக்கிறார் த்ரிஷா. ‘‘Time for some underwater luurvee’’ என புன்னகைக்கிறார் த்ரிஷ்.

தூதுவர்

தெலுங்கானா அரசின் சார்பில் நடந்து வரும் பெண் குழந்தைகள் நலன், கல்வி, மேம்பாடு அமைப்புகளின் தூதுவராகிவிட்டார் ரகுல் ப்ரீத்சிங். ‘Let the change begin’ என நெகிழ்கிறார் ரகுல்.

ஊர் ஊராக வளர்ந்தவர்

ராம்கோபால்வர்மாவின் கண்டு பிடிப்பான அனைகா சோதி, ‘காவியத்தலைவனு’க்குப் பிறகு தமிழில் கமிட் ஆன இரண்டு படங்களையும் நடித்து முடித்துவிட்டார். ஃபேஷன் டிசைனிங் படித்த அனைகா, லக்னோவில் பிறந்து, ஹாங்காங், மும்பை, மலேசியா, மீண்டும் மும்பை என வளர்ந்த பொண்ணு.

தமன்னாவின் க்ரஷ்

தமன்னாவிற்குப் பிடித்த பாலிவுட் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன்தானாம். ‘‘நான் நடிக்க வந்த புதுசுல ஹ்ரித்திக்கைப் பார்த்து நிறைய இன்ஸ்பயர் ஆகியிருக்கேன். இப்பகூட அவர்கூட போட்டோ எடுக்கும் போது கைகள் கொஞ்சம் பட
படக்குது...’’ என்கிறார் தமன்னா.

டீ காதலி

லேட் நைட்டில் படப்பிடிப்பு முடிந்து காரில் தங்குமிடம் திரும்பும்போதுகூட பயணங்களில் தூங்குவது கேத்தரின் தெரசாவிற்கு பிடிக்காத ஒன்று. விண்டோ அருகே அமர்ந்தபடி வெளியே ரசித்து வரும் கேத்தரின், டீக்கடைகள் தென்பட்டால் உடனே காரை நிறுத்தி, சுடச் சுட டீயையும் வாங்கி வைத்து பருகிக்கொண்டே பயணத்தை தொடர்வார்.

கார்ஸி

டாப்ஸியின் மும்பை வீட்டில் புது வரவாக அவரது மெர்சிடிஸ் சொகுசு காரும் சேர்ந்துள்ளது. கார் வந்த ராசியாக இப்போது ஐரோப்பிய நாடுகளுக்கு ஹாலிடே செலிபரேஷனில் இருக்குது பொண்ணு.

தந்தை

சொல்லை மீறு

தெலுங்கு ‘அர்ஜுன் ரெட்டி’ ஹீரோயின் ஷாலினி பாண்டே, ஜபல்பூரில் பிறந்தவர். அவரது அப்பா மத்தியப்பிரதேச அரசு ஊழியர். ஷாலினி கல்லூரியில் படிக்கும் போதே நடிக்க வாய்ப்பு வந்துவிட, ‘மொதல்ல படி, அப்புறம் நடி’ என சொன்னாராம்
அவரது அப்பா. ‘நல்லவேள ஷாலினி அப்பா பேச்சை கேட்கல!’ என நீங்கள் சொல்வது காதில் விழுகிறது.

காத்திருந்த கீர்த்தி

‘சாமி2’ ஷூட்டிங்கில் பரபரக்கும் கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் கிடைத்த இடைவெளியில் லண்டன் சென்று வந்திருக்கிறார். ‘என்னோட தோழி ஏர்போர்ட்ல வந்து என்னை பிக்கப் பண்ணிக்கறேன்னு சொன்னா... ஆனா, ரெண்டு மணி நேரத்துக்குப் பிறகுதான் வந்து சேர்ந்தா!’ என ஃபீலாகிறார் கீர்த்தி. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

படகில் சென்ற ராணி

‘When beautiful evenings like this make me go’ என நிக்கி கல்ரானி சிலிர்ப்பது ஏன் தெரியுமா? ‘கலகலப்பு2’ ஷூட்டிங்கிற்காக வாரணாசி சென்றவர், அங்கே கங்கை நதியில் படகுப் பயணம், கூடவே மாலை நேரத்து அழகில் (sunsetதான் பாஸ்) மயங்கி கிறங்கி அப்படி சிலிர்த்திருக்கிறார்.

ஹாலிடே பேபி

லண்டனில் வின்டர் சீஸனை செம ஜாலியாக கொண்டாடி வருகிறார் ஹன்சிகா. சென்ற சம்மரில் ஒன்லி ஷூட்டிங்.. நோ ஹாலிடே என்பதால், இப்போதுதான் பொண்ணுக்கு ரிலாக்ஸ் டைம் கிடைத்துள்ளதாம்.

ஆக்‌ஷன் தா

அரவிந்த்சாமியோடு நடித்து வரும் ‘வணங்காமுடி’யில் ஆக்‌ஷன் ரோலில் வருகிறார் நந்திதா ஸ்வேதா. ‘ரியல் லைஃபில் பைக் ரைடிங், ஹார்ஸ் ரைடிங் பிடிக்கும். ஸோ, ஃபைட்டிங் சீன்ஸ் ஈஸியாகிடுச்சு...’ என்கிறார் நந்திதா.

மை.பாரதிராஜா