மைனஸ் மைனஸ்



ஸ்கூலுக்கு இன்ஸ்பெக்‌ஷனுக்கு கல்வி ஆபீசர் டீம் வருகிறதென்றால், முன்னமே டீட்டெய்ல் தெரிந்துகொண்டு, பிரியாணி சமைத்து காத்திருப்பது ஹெட்மாஸ்டரின் முதன்மைப் பணி.

ஆனால், இன்ஸ்பெக்‌ஷனுக்கு கல்வி அமைச்சரே வந்தால்..?

உத்தரகாண்டில் உள்ள பள்ளி ஒன்றுக்கு, கல்வி அமைச்சர் அர்விந்த் பாண்டே எதேச்சையாக போகலாமே என்று சென்றார். வகுப்பில் நுழைந்ததும் கணக்குப் புத்தகத்தைப் பிரித்து, ‘மைனஸ் பிளஸ் மைனஸ் = ?’ என்று டீச்சரிடம் கேட்டார். டீச்சர் சிம்பிளாக, ‘மைனஸ்’ என்று சொன்னதுடன் அரசு பிரிண்ட் செய்த புத்தகத்திலும் அதுதான் இருக்கிறது எனக் காண்பித்திருக்கிறார்.

அவ்வளவுதான். கண்சிவந்த கல்வி அமைச்சர், விடை ‘பிளஸ்’ என்றவர் கெமிஸ்ட்ரியில் அதே கேள்வியை கேட்டுள்ளார். பள்ளி மாணவர்களின் பக்கமே திரும்பாமல் ‘புத்தகத்தின் நான்காவது சேப்டர் பெயர் தெரியுமா?’ என்று மீண்டும் டீச்சரை கார்னர் செய்திருக்கிறார்.பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடிய டீச்சரின் வீடியோதான் இன்று இணையத்தில் வைரல் ஹிட். எந்த புண்ணியவான் இதை வீடியோ எடுத்து பதிந்தாரோ..?! 

ரோனி