ரோபோ குங்ஃபூ



யோகா செய்யவே பலரும் இப்போதுதான் இடுப்பை வளைக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சீன ரோபோக்கள் குங்ஃபூவையே கரைத்துக் குடித்து அதிரடி காட்டுகின்றன.

சீனாவின் ஹெய்லாங்ஜியாங் பகுதியிலுள்ள ஹார்பின் நகரில் 300 ரோபோக்கள் குங்ஃபூ பயிற்சியில் அச்சு அசலாகக் கலந்துகொண்டு அசத்தியுள்ளன. மூன்று நாட்கள் நடந்த ரோபோ கிரியேட்டிவ் டிசைன் போட்டியில் ஜிம்னாஸ்டிக்ஸ், அத்லெட்டிக்ஸ் ஆகிய போட்டிகளில் தங்களின் திறனை நிரூபிக்க ரோபோக்களுக்கு சான்ஸ் அளிக்கப்பட்டது.

மொத்தம் 500 ரோபோ டீம்கள் கலந்துகொண்டு தங்கள் சிப்பில் செட் செய்த குங்ஃபூ டேலன்டை நிரூபித்தன. இதற்கு முன்பே அமேசிங் சீனா எனும் டேலன்ட் போட்டியில் 108 ரோபோக்கள் டாய் சீ, குங்ஃபூ மூவ்களை செய்து காட்டி, ஜெட்லீயின் ஃபியர்லெஸ் பட பிஜிஎம்முக்கு குத்தாட்டம் போட்டது உலகறியும். இப்போது இது. சீன ஆர்மி ரெடியாகிருச்சு மோடிஜி!      

ரோனி