மெகா மீன்!



கடல் எனும் ரகசிய பொக்கிஷத்தில் நாம் அறிந்துள்ள உயிரினங்கள் 5%க்கும் குறைவு என்பதை அண்மையில் ரஷ்யாவில் பிடிபட்டுள்ள வினோத மீன் ஒன்று நிரூபித்துள்ளது. ஷாக்லைன் மீனவர்குழு, மேற்கு ரஷ்ய கடற்புறத்தில் வலைபோட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சிக்கிய மீன்தான் சன்ஃபிஷ். சும்மாயில்லை, எடை 1100 கிலோ கொண்ட மெகா ராட்சஷன் இது.

‘‘இதுபோல பிரமாண்ட மீன் வகையை நான் பார்த்ததே இல்லை. 1.5 மீட்டர் நீளத்தில் ஒரு டன்னுக்கும் அதிக எடையில் பிரமிப்பூட்டுகிறது இந்த மீன்...’’ என்கிறார் மீனவரான ஆர்தர் பால்கரோவ். இதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. கடந்த ஆண்டு இதேபோல ரஷ்யாவில் மனிதர்களைப் போன்ற பற்களைக் கொண்ட ராட்சஷ மீன் ஒண்று பிடிபட்டிருக்கிறது. விடாது கடல்!

ரோனி