பெண்களை பாதுகாக்க எலக்ட்ரோ ஷூ!



பெண்களுக்கான பாதுகாப்புக்கு அரசு தரும் கேரண்டியை விட செல்ஃபாக பெண்களே தம்மை பாதுகாப்பது மன உளைச்சல் போக்குவதோடு கான்ஃபிடன்ஸையும் கறாராக வளர்க்கும்.

இதற்குத்தான் ஹைதராபாத் சுட்டிப்பையனும் உதவியுள்ளான்.பள்ளி மாணவரான சித்தார்த் மண்டலா உருவாக்கியுள்ள எலக்ட்ரோ ஷூ ஆச்சரிய பாதுகாப்பை பெண்களுக்கு வழங்குகிறது. நடக்கும்போதே சார்ஜ் ஆகி பேட்டரியை ஃபில் செய்துகொள்ளும் இந்த எலக்ட்ரிக் செருப்பு மூலம் தவறான எண்ணத்துடன் நெருங்கும் நபர்களை உதைத்தால் எலக்ட்ரிக் செருப்பிலிருந்து 0.1 ஆம்ப் கரண்ட் பாயும். தவிர இதிலிருந்தே போலீஸ் ஸ்டேஷனுக்கு எமர்ஜென்சி செய்தியையும் அனுப்ப முடியுமாம். பிசிக்ஸ் பிதாமகன்!

ரோனி