டாப் க்ளாஸ்!




‘காப்புரிமையை மீறினால் ஆப்பு’ என்று சொன்ன அலர்ட் கட்டுரை டாப் க்ளாஸ்.
- சண்முகராஜ், சென்னை; அர்ஷத் ஃபயாஸ்,குடியாத்தம்; யூசுப், நாகூர்; நவீன் சுந்தர், திருச்சி;
சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

இதெல்லாம நமக்கு சரிப்பட்டு வருமா என பீதியோடு புல்லரிக்க வைக்கிறது ‘நிர்வாணப்பூங்கா’ செய்தி.
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; மனோகர், கோவை;
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

 ‘கருப்பன்’ சீக்கிரம் வரமாட்டானா என ஆவலைத் தூண்டும் செய்தி ஆசம்.
- கணேசன், சென்னை;
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘காபி டேபிளி’ல் வந்த கட்டாய தாம்பத்ய உறவு செய்தி செம ஷாக்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘தேவதைகள் தேசம்’ ட்யூஷன் சென்டர், தீபாவளி என நாஸ்டால்ஜியா கொண்டாட்டம்.
- லட்சுமி நாராயணன், வடலூர்.

ஓவியத்தால் திருநங்கைகளின் டேலன்டை உலகத்திற்கு சொன்ன பூர்ணிமா, சாதனா தோழிகளுக்கு சந்தோஷ ஷொட்டு!
- மயிலை கோபி, அசோக்நகர்.

பெண்களின் முன்னேற்றத்திற்கான நவோதயம் பத்திரிகைச் செய்தி இன்ப அதிர்ச்சி.
- ஆர்.சண்முகராஜ், சென்னை;

சைமன்தேவா, விநாயகபுரம்; பூதலிங்கம், நாகர்கோவில்;
லட்சுமி நாராயணன், வடலூர்;
வண்ணை கணேசன், சென்னை;
கே.எஸ்.குமார், விழுப்புரம்.

இந்தூரை பளிச்சென க்ளீனாக்கிய நகராட்சி
கமிஷனர் மனிஷ்சிங்குக்கு பெஸ்ட் விஷஸ்.
- யூசுப், நாகூர்; டி.எஸ்.தேவா, கதிர்வேடு; மயிலை கோபி, அசோக்நகர்.

மொழியால் மட்டுமே ஓர் இனம் மூச்சுவிடும் என்ற வீரசந்தானத்தின் எண்ணத்தை யுகபாரதி குறிப்பிட்டிருப்பது நெகிழ்ச்சிப்பதிவு.
- மனோகர், கோவை.

கதைக்கு மெனக்கெடும் மலையாள தேசத்தில் ‘The Painted House’ படத்திற்கு அவமானமா?
- முரளிதரன், மதுரை.

ஆபீசில் குட்டித்தூக்கத்திற்கு ஏற்பாடு செய்தால் வேலை நடக்குமா?
- சண்முகராஜ், சென்னை; மனோகர், கோவை.

கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத தங்கமகன் ஜாஜாரியா ஜொலிக்கிறார்.
- நவீன்சுந்தர், திருச்சி; சைமன்தேவா, விநாயகபுரம்; பூதலிங்கம், நாகர்கோவில்; கோவிந்தராஜன், குடியாத்தம்.

ப்ளூவேல் தடையாவதற்குள் Hotwater சேலன்ஜ் என அடுத்த பூதம் கிளம்பிவிட்டதா?
- பூதலிங்கம், நாகர்கோவில்.

சென்னை சென்ட்ரல், எழும்பூர் பற்றிய வரலாற்றுச் செய்திகளும், தத்ரூப விவரணைகளும் அருமை.
- அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை; அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்; ஜெரிக், சென்னை; சிதம்பரகுமாரசாமி, அசோக்நகர்.

‘புரியாத புதிர்’, ‘குரங்கு பொம்மை’ விமர்சனங்கள் நடுநிலைமைக்கு சூப்பர் எக்சாம்பிள்.
- அரிகிருஷ்ணன், திருவண்ணாமலை.

ரீடர்ஸ் வாய்ஸ்