திருநங்கை டாய்லெட்!- ரோனி

ரேஷன்கார்டு, மண்ணெண்ணெய், இறந்தவர்களை எரிக்கவும் ஆதார் என தினமும் ஹைவோல்டேஜ் பதட்டத்தை தாங்கி வாழும் இந்தியர்களிலிருந்து சோபன் முகர்ஜி மாறுபடுவது, ஒடுக்கப்படும் திருநங்கைகளைப் பற்றிய அளவில்லாத அக்கறையினால்தான். கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞரான சோபன் முகர்ஜி, திருநங்கைகளுக்கான 4 டாய்லெட்டுகளை உருவாக்கித் தந்திருக்கிறார்.

அதற்குத்தான் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. ‘‘கல்லூரி சென்று வந்தபோது திருநங்கைகள் கழிவறையை பயன்படுத்த முடியாத அவலத்தை பார்த்தேன். அதற்கு ஏதாவது செய்யலாம் என்று எனது ஐடியாவை கவுன்சிலர் மஜும்தாரிடம் சொன்னேன். அவரும் புரிந்து கொண்டு டாய்லெட்டுகளை உருவாக்கித் தந்ததற்கு மகிழ்ச்சி! தெரிவித்தார்’’ என புன்னகைக்கிறார் சோபன் முகர்ஜி. மாற்றத்தின் தலைவன்!