லைவ் பன்ச்!- ரோனி

ஸ்டூடியோவுக்குள் சண்டைகள் நடந்தால் நாசுக்காக தப்பித்து விடலாம். ஆனால், லைவாக சனியன் சகடைகள் தேடிவந்து முகத்திலே குத்தினால் என்ன செய்வது? ரஷ்யாவின் புகழ்பெற்ற நேஷனல் என்டிவியின் லைவ் நிகழ்ச்சி அது. செய்தியாளர் ராணுவ அணிவகுப்பு குறித்த செய்தியை ஆதி முதல் அந்தம் வரை பிய்த்து உதறி பேசிக்கொண்டிருந்தபோதுதான் நடந்தது அந்த விபரீதம்.

திடீரென டிவி பிரேமுக்குள் மூர்க்கமாக நுழைந்து ‘நாங்கள் உக்ரைனை எடுத்துக்கொள்வோம்’ என்று குடிபோதையில் கோஷமிட்டவரை ‘சும்மாயிரு, அப்படியெல்லாம் பேசக்கூடாது’ என பதறி தடுத்தார் செய்தியாளர். ‘நீ சொல்லி நான் கேட்கணுமா? அதெப்படி என்னை அப்படி சொல்லலாம்?’ என லைவிலேயே செய்தியாளரின் முகத்தில் குத்திவிட்டார் போதை ஆசாமி. கேமரா அனைத்தையும் டிஆர்பி மேட்டராக மாற்றியது சமர்த்து என்றாலும் நியூஸ் வாசிக்கும் நிகிதா முகத்தில் நிமிஷ நேரத்தில் வந்து போனது மரண பீதி!