அன்று வீக் மாணவர், இன்று எஞ்சினியரிங் வின்னர்!- ரோனி

குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்த 15 வயது நிர்பய் தாக்கூர், ‘குஜராத் டெக்னாலஜி யுனிவர்சிட்டி’யில் புல்லட் ட்ரெயின் வேகத்தில் எஞ்சினியரிங் முடித்ததுதான் சூப்பர் பரபர நியூஸ். சிறுவயதில் வீக் மாணவர் என டீச்சர்களால் கிண்டல் செய்யப்பட்ட நிர்பய் தாக்கூர், 8 - 10 வகுப்புகளை ஆறு மாதத்திலும், 11 - 12 வகுப்புகளை வெறும் மூன்றே மாதங்களிலும் முடித்ததுதான் முந்தைய அசுர சாதனை.

IGCSE சிலபஸ் முறையில் நிர்பய் தாக்கூர் இந்த அசத்தல் சாதனையை படைத்துள்ளார். தினமும் 9 மணிநேரம் வகுப்புகள் நடத்தப்பட்டு செய்த ஸ்பெஷல் சாதனை இது. அடுத்து பத்து எஞ்சினியரிங் டிகிரிகள் முடிப்பது இவரது லட்சியமாம். ஸ்டூடண்ட் நம்பர் 1!