ஸ்டேட்பேங்க் ஆஃப் தக்காளி!- ரோனி

மெஸ்ஸில் தக்காளி தொக்கு என்பதை சொல்லி முடிக்கும் முன்பே தாலிபான் டெரரிஸ்ட் போல தீயாய் பதறி முறைக்கிறார்கள். கொல்கத்தாவில் ரூ.95, டெல்லியில் ரூ.92, மும்பையில் ரூ.80 என தக்காளி எகிறும் நிலையில் உ.பி.யில் தக்காளிக்கென பேங்க் தொடங்கி மிரட்டியிருக்கிறார்கள் சில நல்ல உள்ளங்கள்.

லக்னோவில்தான் தக்காளி வங்கி தொடங்கியிருக்கிறார்கள். 5% வட்டி, லாக்கர் வசதி, 80% லோன் என புது ரூட்டில் ஐடியா பிடித்து போராட்டம் செய்கிறார்கள் உ.பி. காங்கிரஸ் கட்சியினர். இங்கு தக்காளி சேல்ஸும் உண்டு. இதையும் நம்பி கிருஷ்ணசர்மா என்ற 103 வயது விவசாயி, அரைக்கிலோ தக்காளியை முதலீடாக்கியுள்ளார். ‘‘6 மாதத்தில் ஒரு கிலோ கிடைக்கும் என்று கூறியுள்ளனர். அதுவரையில் நான் உயிரோடு இருந்தால் அதை வாங்கிக்கொள்வேன்!’’ என்கிறார்!