ஃபேஸ்புக் கல்யாண கலாட்டா!- ரோனி

கல்யாணம் ஆவதெல்லாம் ஏலியனை பூமியில் பார்த்தேன் என்று சொல்வது போல அரிதினும் அரிய சமாச்சாரமாக மாறிக் கொண்டிருக்கிறது. மலப்புரம் மாவட்டத்தின் ரன்ஜிஸ் மஞ்சேரி என்பவர்தான் மேரேஜுக்கு பெண்தேடும் திருநிறைச்செல்வன். 30 பிளஸ்ஸில் போட்டோ கிராபராக பணிபுரியும் இவருக்கு வரும் வரன்கள் எல்லாம் சம்பளம் கம்மி, வயசான உங்க பேரன்ட்ஸையும் பாத்துக்கணுமா? என கேள்விகள் கேட்டு தட்டிக்கழிக்க, மனிதர் நொந்து நூடுல்ஸாகிவிட்டார்.

வரிவிளம்பரம் டூ மேட்ரிமோனியல் வரை அலைந்து தலைமுடி கொட்டிப்போன நிலையில் அவர் கிரியேட்டிவ்வாக என்ன செய்தார் தெரியுமா? வேறுவழியின்றி ஃபேஸ்புக்கிலேயே விளம்பரம் செய்ய... அபுதாபி, பஹ்ரைன், துபாய், சவுதி அரேபியா என எக்கச்சக்க வரன்கள் வந்து குவிந்திருக்கின்றன. காரணம், ‘பெண்ணை பிடித்திருந்தால் போதும். வேறு எந்த டிமாண்டும் இல்லை’ என விளம்பரத்தில் குறிப்பிட்டதுதான்!