கண்டனம்!



-ரீடர்ஸ் வாய்ஸ்

பழங்களை உடம்புக்கு ஆரோக்கியம் என நம்பி சாப்பிடுவது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை என உணர்த்தி ‘யூ டூ புரூட்டஸ்’ என பீதி கொள்ள வைத்தது ‘அமுதா? விஷமா?’ கட்டுரை. பழத்தை அமிர்தமாக்க டிப்ஸ்களைக் கூறியதற்கு நன்றி!
- த.சத்தியநாராயணன், சென்னை - 72. ஜானகி ரங்கநாதன், சென்னை - 4. சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

காற்று மாசுபடுவதை எதிர்த்து நடந்த நிர்வாண சைக்கிள் பேரணியில் கலந்துகொண்ட இந்திய டிவி நடிகை மினாள் ஜெயின், இ்ந்திய கலாசாரத்தின் மீது மாசு படியவைத்து அதன் முதுகெலும்பை முறித்துள்ளது கண்டனத்திற்குரியது.
- ஆர்.சண்முகராஜ், சென்னை - 19.

அமெரிக்காவில் தயாராகும் ஊறுகாய் சோடா செய்தியைப் படித்தவுடன் இந்தியாவில் ‘எப்ப சார் கடை திறப்பீங்க?’ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது!
- விஜயநிர்மலன், சென்னை.

சீரியஸ் படங்களில் நடித்து வந்த அருள்நிதி, காமெடியிலும் அசத்துவார் என்ற நம்பிக்கையை இயக்குநர் ராதாமோகனின் பேட்டி தருகிறது. யாரையும் நோகடிக்காமல், அட்வைஸ்களை அள்ளித்தெளிக்காமல் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதே ராதாமோகனின் தனி அழகுதான். பெண்களும் உணர்ச்சிகள் கொண்ட சக உயிர் என்று பேசிய அவரது ‘பிருந்தாவனம்’ ரசிக்க வைத்தது.
- த.சத்தியநாராயணன், சென்னை. குமார், விழுப்புரம். சரவணன், மயிலாடுதுறை. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

‘அறிந்த இடம் அறியாத விஷய’த்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பிரமாண்டம் மூக்கின் மேல் விரல்வைக்கும் ரகம். சின்னச் சின்ன விஷயங்களோடு கோயம்பேட்டின் பிரச்னைகளையும் அலசி எழுதியிருந்தது சிறப்பு.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி. ஆர்.சண்முகராஜ், சென்னை.

மனிதனின் பேராசையால் மாண்டுபோன நீராதாரங்களின் தேடலாய் லலிதாமதியின் கவிதை, இயற்கையின் வேதனை விம்மலாய் நெஞ்சை கனமாக்கியது. வள்ளி மயிலின் ‘மொட்டு’ கவிதையின் கடைசி வரிகள் அட்டகாசம். ‘கவிதை வன’த்தில் லதா அருணாசலத்தின் ‘அம்மாவின் அல்சைமர்’ மனம் தொட்டது.  
- மல்லிகா குரு, சென்னை. நவீன்சுந்தர், திருச்சி. விஜயநிர்மலன், சென்னை - 125. குமார், விழுப்புரம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் இயக்கத்திலும் வெளிவரவிருக்கும் ‘லெ மஸ்க்’ படத்தை விர்ச்சுவல் ரியாலிட்டியில் பார்க்க நாங்கள் இன்றே ரெடி.
- சிவகுமார், சென்னை - 33. எஸ்.நவீன் சுந்தர், முத்தரசநல்லூர்.