டிவி நிருபருக்கு பளார்!



பணியில் கவனமாக இருந்தாலும் சில ஆர்வக்கோளாறு ஆட்களின் கோக்குமாக்குகளால் நம் வேலையே காலியாகும் நிலையும் ஏற்படும்.

இங்கிலாந்தின் தனியார் டிவி நிருபர் பென் ப்ரௌனுக்கும் நடந்தது அப்படி ஒரு மேட்டர்தான். இங்கிலாந்தின் யார்க்‌ஷையரில் தொழிலாளர் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த பரபர இன்டர்வியூவை, அரசியல் எடிட்டர் நார்மனுடன் சேர்ந்து பேசி எடுத்துக் கொண்டிருந்தார் ப்ரௌன்.

பிரேக் சொல்லாதபோதும் திடீரென்று கேமரா ப்ரேமுக்குள் கரடியாய் நுழைந்த டீன் ஏஜ் பெண் ஒருவர் தம்ஸ் காட்டி சில்மிஷம் செய்ய, எரிச்சலான ப்ரௌன் அவரை கைகளால் ஒதுக்கித்தள்ளிவிட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்தார். அப்போது அவர் அறியாமல் அவரது கை பெண்ணின் நெஞ்சில் பட்டுவிட்டது.

ஆக்ரோஷமான அந்தப் பெண் தன் கைகளால் ஓங்கி ப்ரௌனின் தோள் பட்டையில் அறைந்துவிட்டு சென்றுவிட்டார். லைவில் ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியை உலகமே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் ப்ரௌன், உணர்ச்சி காட்டாமல் நிகழ்ச்சியை தொடர்ந்து அப்ளாஸை அள்ளினார்!