உலகின் மூத்த ஸ்கைடைவர்!



-த.சக்திவேல்

இங்கிலாந்தின் பசும்புல்வெளிகள் மீது பறந்த அந்தக் குட்டி விமானத்தில் இருந்து வரிசையாக நான்கைந்து வீரர்கள் ஸ்கை டைவிங் அடித்தார்கள்.

ஒரு பறவையைப் போல அவர்கள் மேகக் கூட்டங்களின் நடுவில் பாராசூட்டின் துணையோடு சில நிமிடங்கள் பறந்தார்கள். இறுதியாக பயிற்சியாளரின் உதவியுடன் ஸ்கை டைவிங் அடிக்கிறார், ஹேயாஸ். அவர் முகம் ஆனந்தத்தில் பளிச்சிட்டது. ஒரு குழந்தையைப்போல அந்தரத்தில் இருந்து கீழே இருக்கும் ஒவ்வொன்றையும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

பாராசூட் விரிந்து நிலத்தை நோக்கி வேகமாக ராக்கெட்டைப் போல கீழிறங்கினார். அப்போது அங்கே கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் ‘‘ஹேயாஸ்...ஹேயாஸ்’’ என்று உற்சாகமாகக் கூச்சலிட்டு அவரை வரவேற்றனர். ஹேயாஸிற்கு 90 வயதில்தான் ஸ்கை டைவிங்கின் மீது ஆர்வமே பிறந்திருக்கிறது.

ஆனால், அவர் மனைவி இதற்குத் தடை போட்டுவிட்டார். அவர் விடவில்லை. மனைவி இறந்தபிறகு மீண்டும் ஸ்கை டைவிங் பயிற்சியில் ஈடுபட்டு கடந்த வாரம் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்திருக்கிறார். ஹேயாஸின் வயது ஜஸ்ட் 101 தான்!