கலக்கல்!
-ரீடர்ஸ் வாய்ஸ்
நீரின்றி அமையும் தமிழகம் என்ற தலைப்பில் மாவட்டவாரியாக தண்ணீரின் தேவையைப் படம்பிடித்துக் காட்டிய குங்குமத்திற்கு பாராட்டுகள்! தண்ணீர் தட்டுப்பாடு செய்தியோடு அதனை சமாளிக்கும் நம்பிக்கை அளித்தீர்களே, அதுதான் உண்மையான ஜர்னலிசம்! தமிழக மக்களுக்கு தண்ணீர் கிடைக்காது என்று நினைக்கும்போது, மக்கள் தேர்ந்தெடுத்த கூவத்தூர் ரிசார்ட் விஐபிகளின் மேல் கடும்கோபம் வருகிறது. - சிவகார்த்தி, புறத்தாக்குடி. குமார், விழுப்புரம். சிவமைந்தன், சென்னை - 78. நடராஜன், சிதம்பரம். த.சத்தியநாராயணன், சென்னை - 72. இராம.கண்ணன், நெல்லை. மனோகர், கோவை. மாணிக்கவாசகம், கும்பகோணம்.
மாமனார் கனவை நிறைவேற்றும் மருமகள் ஹேமா ருக்மணியின் திரைச்சாதனைகள் கலக்கல்! - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர். மயிலை கோபி, சென்னை - 83. நடராஜன், சிதம்பரம்.
சென்னைப் பெண் பூஜா கார்டியாவின் சிங்க காதல் கட்டுரையில் தெரிந்த அவரின் ஆர்வத்திற்கு ராயல் சல்யூட். - சிவகார்த்தி, சென்னை - 41. நவீன்சுந்தர், திருச்சி.
சமாதிக்குள் மதுவிலக்கு பிரசாரம், ஷூ தட்டினால் பீட்ஸா, கடவுளிடம் அனுப்பப்பட்ட மீன்கள் அனைத்தும் அட்டகாசம். - விஜயநிர்மலன், சென்னை. சிவகுமார், சென்னை - 33.
தீவிரவாத பூமியில், சோனம் வான்சுக்கின் மாற்றுப்பல்கலைக்கழகம், நூற்றுக்கணக்கான வான்சுக்குகளை அங்கு விதைக்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி. கல்வி தந்தைகள் என்ற கல்விக் கொள்ளையர்களுள்ள நம் நாட்டுக்கு ஒரு சோனம் வான்சுக் போதாது, ஓராயிரம் பேர் தேவை. - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி. மாணிக்கவாசகம், கும்பகோணம்.
மெர்லின் படக்கதாநாயகன் கண்டக்டர் ஆக பணிபுரிந்தவரா? இவரும் சூப்பர் ஸ்டாராக மாறுவாரா என்று பார்ப்போம். - ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
டாக்டர் கு.கணேசனின் தொடர் வெள்ளிக்கிழமை குங்குமத்தை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கிறது. நோய், தீர்வு என அட்டகாசப்பகுதி. - கே.சங்கரநாராயணன், நெல்லை.
யமுனை ஆற்றின் நிலை வேதனையின் உச்சம். யமுனை உயிர் பிழைப்பதில் பூமிக்கோளத்தின் பாதுகாப்பும் உள்ளது. தாயையும், நாட்டையும் பேணுவது நம் கடமை என மக்களின் பொறுப்பையும் யமுனை கட்டுரையில் உணர வைத்துவிட்டீர்கள். - மனோகர், கோவை - 14. த.சத்தியநாராயணன், சென்னை - 72.
‘தமிழ்நாட்டு நீதிமான்கள்’ தொடரில் இடம்பெற்ற சடகோபாச்சாரியார் கட்டுரை அருமை. செக்கிழுத்த செம்மலுக்காக வாதாடிய சடகோபாச்சாரியார் காலத்தின் பொக்கிஷம். - கே.ஏ.ஜீவகுமார், சென்னை. மனோகர், கோவை.
‘அறிந்த இடம் அறியாத விஷயம்’ தொடரில் மெரினா பற்றி பேராச்சி கண்ணன் எழுதிய விஷயங்களும், வின்சென்டின் போட்டோக்களும் மிக அருமை. - கே.ஏ.ஜீவகுமார், சென்னை.
|