கமென்ட் கோயிந்து
சக்திவேல் மருதமுத்து
மும்பை தனியார் வங்கி ஏ.டி.எம்.மில் ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்டு இருந்த புதிய 500 ரூபாய் நோட்டு: செய்தி எனக்கென்னமோ ரெண்டு பக்கமும் அச்சடிச்ச நோட்டுதான், அடுக்கி வச்சதுல ஒரு பக்கம் சாயம் போயிருக்குமோன்னு டவுட்டா இருக்கு!
ஏ.டி.எம் மற்றும் வங்கிகளுக்கு வந்து ரூபாய் நோட்டுகளைப் பெற்றுச் செல்லும் அனைவரும் எதிர்க்கட்சிகளால் அனுப்பப்பட்டவர்கள்: பாபா ராம்தேவ் புரியுது குருநாதா... உங்க கட்சி ஆளுங்க எல்லாம் முன்னாடியே மாத்திட்டாங்கன்னு சொல்ல வர்றீங்க, அதானே!
சாயம் போனால் நல்ல நோட்டு, போகாவிட்டால் கள்ள நோட்டு: மத்திய அரசு பணத்தை நாசிக்ல அச்சடிக்கிறாய்ங்களா... இல்ல, திருப்பூர் சாயப்பட்டறையில அச்சடிக்கிறாய்ங்களா?
மக்கள் ஏன் கூப்பாடு போடுகிறார்கள்? பேங்க்கில் கூட்டமே இல்லையே: சல்மான்கான் அண்ணே! நீங்க காரை ஓட்டிட்டு வந்ததே கூட்டத்து மேலதான்... அப்பறம் எங்கருந்து கூட்டம் இருக்கும்?
திருமணத்திற்கு ரூ.2.5 லட்சம் வரை வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம்: மத்திய அரசு கல்யாணம் பண்ணிக் கிறதுல எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லீங்க... ஆனா நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறதுக்கு எம் பொண்டாட்டி ஒத்துக் கணுமே!?
நாட்டில் உப்பு காலி ஆவதாக வதந்தி, மளிகைக்கடைகளில் குவிந்த மக்கள்: செய்தி பேங்க் வாசல் வரிசையில கடைசியா நின்னுட்டு இருந்த எவனோதான் இதை கெளப்பி விட்டிருக்கணும்!
ஓவியங்கள்: கண்ணா
|