பிங்க் பார்பி தமன்னா



விஷாலின் தெளிவும் திட்டமும் ஆஹா! பிங்க் பார்பி தமன்னாவின் தாறுமாறு உடை, ஹார்மோன்களின் மடை உடைகிறது.
-பி.சின்னக்கண்ணு, திண்டுக்கல்.

‘அய்க்கூ’ நூற்றாண்டோடு அப்துல் ரகுமானின் 80 வயதுக்கு கவிஞர்கள் கூடி செய்த அங்கீகாரம் குருமரியாதை.
-டி.செந்தில்நாதன், வேலூர்.

வெறுப்பைத் தூண்டி வென்றாலும், ட்ரம்ப் மக்களின் மனங்களை வென்றால்தான் ஆட்சி நிலைக்கும் என்ற அகஸ்டஸின் கட்டுரை பொலிடிக்கல் பாடம்.
-செ.சாமிநாதன், சென்னை-4

பஞ்சாப் லஸ்ஸி காஜலின் இளமைச் சரிவுகளில் கிளாமர் மப்பு ஏகபோகம்.
-எம்.பி.சூர்யா, சென்னை-78

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான அக- புற தடுப்புகளினூடே சமூக நிலைகளைக் கூறிய ‘முகங்களின் தேசம்’ மனசாட்சியின் குரல்.
-சு.இளவேந்தன், திருப்பூர்.

இப்படியா அப்படியா என பல சான்ஸ்களையும் யோசிக்க வைத்து ஜெட் வேகத்தில் பாய்கிறது ‘விஜயனின் வில்’ தொடர்.
-தா.அரசமார், தர்மபுரி.

வயிறு குறித்த ஏ டூ இசட் தகவல்களைக்கூறிய ‘செகண்ட் ஒப்பீனியன்’ தொடர், வாழ்விற்கான அமிர்த சஞ்சீவினி.
-கே.ஜி.மாரிமுத்து, திருவண்ணாமலை.

மரபு உணவுகளின் உன்னத ருசியோடு பாரம்பரிய வாழ்வையும் பந்தி வைத்த ‘உயிரமுது’ தொடர் ஏழாம் சுவை.
-எஸ்.கபிலன், நாகர்கோயில்.

‘தமிழ்நாட்டு நீதிமான்கள்’ தொடரில் வக்கீல் தொழிலில் திட்டமிட்டு உழைத்துச்  சேர்த்த பணத்தை மக்களின் கல்விக்காகச் செலவிட்ட வி.எல். எதிராஜ் அதிசய மனிதரேதான்.
-ஜே.சுந்தரேசன், கோவில்பட்டி.

உடலை வைத்தே பெண்களைப் பின்னுக்கிழுக்கும் சமூக அவலத்தை பொளேர் என்று கூறியது ‘உறவெனும் திரைக்கதை’.
-த.சா.மஞ்சுளா, திருவள்ளூர்.

சரியான ப்ளானின்றி மக்களின் மீதே சர்ஜிக்கல் அட்டாக்காக மாறிய மோடியின் திட்டம் குறித்த லைவ் ரிப்போர்ட் டாக  பிளாக்மணி கவர்
ஸ்டோரி கச்சிதம்.
-ஏ.கரன்சிவாஜி, சென்னை-78

எளிய மனிதர்களின் நிம்மதியான வாழ்க்கையையும் ரீவைண்டிங் இளமைக்கால நினைவுகளுமாக விவேகாவின் ‘டவுன்லோடு மனசு’ பச்சைவெளி குளிர்ச்சி.
-ஆர்.சிவமுருகன், கோவை.