அவனும் அவளும்...
அதற்கு முன்பு அவள் மிகச்சுதந்திரமானவளாக இருந்தாள் தன்னைப் பறவை எனவும் கூண்டினை விரும்புவதேயில்லை பறவைகள்
எனவும் சொல்லித் திரிபவள்தான் அவள் அவன் அவளை நேசிக்கத் தொடங்கினான் அவளும் சம்மதித்தாள் அவன் அவளை கொண்டாடத் தொடங்கினான் அவளும் உடன்படுகிறாள் அவன் அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கினான் அவள் அதை விரும்பினாள் அவன் இப்போது அச்சமடைகிறான் அவள் அதனை அறியவில்லை அவன் இப்போது மேலும் அச்சமடைகிறான் அவள் உணரவேயில்லை அவன் இப்போது மேலும் மேலும் அச்சமடைகிறான் அவள் அதற்கு முன்பு மிகச் சுதந்திரமானவளாக இருந்தாள் பறவையின் இயல்பினை என்றேனும் அவள் கைக்கொள்ளக் கூடுமென கலங்கி கூண்டு ஒன்றினை செய்யத் தொடங்கினான்.
-சக்திஜோதி
|