ஜோக்ஸ்
நமக்கு கூட்டணி அமையாதது வெளில தெரிஞ்சு போச்சு...’’ ‘‘எப்படிச் சொல்றீங்க தலைவரே..?’’ ‘‘லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன் பண்ணி, ‘கொஞ்சம் வாங்க... பேசிட்டிருக்கலாம்’னு கூப்பிடுறாங்க!’’ - அம்பை தேவா, சென்னை-116.
அந்தக் கூட்டணி இப்ப ரொம்ப பலவீனமா ஆகிடுச்சுன்னு எப்படிச் சொல்றீங்க..?’’ ‘‘முன்னாடியெல்லாம் கைய பிடிச்சு தூக்கி காண்பிச்ச தலைவருங்க, இப்ப விரலைப் பிடிச்சு தூக்கிக் காண்பிக்கிறாங்களே!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
ஸ்பீக்கரு... தலைவர் தேர்தல் பிரசாரத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் மேற்கொள்ள இருப்பதால், தொகுதி மக்கள் அனைவரும் மொபைலில் நெட் பேக் போட்டு ஆன்லைனில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்...’’ - அ.ரியாஸ், சேலம்.
ஸ்பீக்கரு...
‘‘நான் கடந்தமுறை எம்.எல்.ஏவா இருந்து தொகுதிப் பக்கம் வரலையேன்னு வருத்தப்படாதீங்க. இப்போ பாருங்க... எம்.எல்.ஏ. ஆவதற்கு முன்னாலேயே வந்துட்டேன்!’’ - ஆர்.நெடுஞ்செழியன், பருத்திச்சேரி.
கூட்டணிப் பேச்சுவார்த்தை நடக்கற அறைக்குள்ளே தலைவர் போனதும் என்ன சொன்னாங்க..?’’ ‘‘அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்திருக்கக் கூடாதா... இப்பதான் பேசி முடிச்சோம்னு சொல்லிருக்காங்க!’’ - அம்பை தேவா, சென்னை-116.
உங்க தலைவர் தேர்தல்ல ஜெயிச்சா முதல் கையெழுத்து எதுல போடுவாரு..?’’ ‘‘தலைவர் ஜெயிச்சாலும் தோற்றாலும் முதல் கையெழுத்து போலீஸ் ஸ்டேஷன்லதான் போடுவாரு...’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
|