ஜோக்ஸ்
வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா..?’’ ‘‘எங்களுக்குக் கூட்டணி அமையறதுக்குள்ள தேர்தல் தேதி அறிவிச்சது நியாயமா யுவர் ஆனர்?’’ - அம்பை தேவா, சென்னை-116.
ஸ்பீக்கரு...
கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு வந்த தலைவரை வெளியே நிற்க வைத்து, ‘உள்ளே ஹவுஸ்ஃபுல்’ என்று சொல்லி, 2021 தேர்தல் கூட்டணிக்கு டோக்கன் தந்து அனுப்பி வைத்த துரோகிகளை...’’ - அம்பை தேவா, சென்னை-116.
இந்தத் தொகுதியை தக்க வச்சுக்கணும்னு சொல்றீங்களே... போன தேர்தல்ல இங்கேதான் ஜெயிச்சீங்களா?’’ ‘‘ம்ஹும்! இங்கேதான் டெபாசிட் கிடைச்சுது...’’ - அம்பை தேவா, சென்னை-116.
இன்னும் தேர்தலே முடியலை... அதுக்குள்ள தலைவர் என்ன தொகுதிக்கு நன்றி சொல்ல வந்துட்டாரு?’’ ‘‘அவரு இப்ப நன்றி சொல்ல வந்தது, போன தேர்தல்ல ஜெயிச்சதுக்காம்...’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
தலைவர் எதுக்கு பெண்டாட்டிகிட்ட அடி வாங்கறதைப் போய் வாட்ஸ் அப்ல தொகுதி மக்கள் எல்லாருக்கும் அனுப்பறாரு..?’’ ‘‘அப்படியாவது தனக்கு அனுதாப ஓட்டு விழுதான்னு பார்க்கலாமேன்னுதான்!’’ - வி.சாரதி டேச்சு, சென்னை-5.
என்னது... கடைசியில நமக்கு 3 தொகுதிதான் மிஞ்சுதா?’’ ‘‘ஆமாம் தலைவரே! 26 கட்சிங்களை கூட்டணியில சேர்த்து 231 தொகுதியை தாரை வார்த்துட்டீங்களே...’’ - அ.ரியாஸ், சேலம்.
ஸ்பீக்கரு...
உங்களுக்கு ஒன்றரை கோடி புதிய வாக்காளர்கள் ஆதரவு இருக்கிறதென்றால் எங்களுக்கு இரண்டு கோடி கள்ள வாக்காளர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை எதிரணியினருக்கு கூறிக்கொள்வதுடன்...’’ - எஸ்.கோபாலன், சென்னை-70.
|