வெற்றி மேல் வெற்றி தரும் கவசங்கள் பவானி கவசம் -6



பத்து பொருத்தங்களை பார்த்து ஒன்பது கோள்களை ஆராய்ந்து எட்டு திசை உற்றார்  நண்பர்களை அழைத்து ஏழு ஸ்வரங்களை பாடி  ஆறு வகையான உணவுகளை அளித்து, பஞ்ச பூதங்கள் சாட்சியாக ,நான்கு வேதங்களை சொல்லி, மூன்று முடுச்சுகளை போட்டு, இரு மணத்தை ஓர் மணமாக அமைவது தான் திருமணம்.

இத் திருமணம்  பெரியோர்கள் ஆசிர்வாதத்தோடு இல்லற வாழ்வில் இணையும் சடங்கு ஆகும். சரியான வயது காலத்தில் தன் பிள்ளைகளுக்கு  திருமணம் செய்து விடவே  பெற்றோர்கள் அனைவரும் விரும்புவர்.  ஆனால் சிலருக்கு திருமண தோஷம் இருக்கும் பட்சத்தில் திருமணம் நடக்க கால தாமதம் ஆகிறது.

இந்த திருமண தோஷத்திற்கான காரணம் என்ன என்பதை  பொதுவாக  இங்கு தெரிந்து கொள்ளலாம். ஜோதிடத்தில் பல சுகங்களுக்கு காரகனாகவும், இல்லற வாழ்வில் ஆண்-பெண் இணைவிற்கு முக்கிய பங்கு வகிக்கும் கிரகமாக “சுக்கிரன்” இருக்கிறார். இந்த சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் “கடகம், சிம்மம், கன்னி” போன்ற சுக்கிரன் “பகை மற்றும் நீச்சம்” பெறும் ராசிகளில் இருந்தால், அந்த ஜாதகருக்கு சுக்கிரனால் “திருமண தோஷம்” ஏற்படுகிறது.

இன்னும் சிலருக்கு  அவர்களுடைய  ஜாதகத்தில். தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான  தோஷங்களால்  திருமணம் தடைப்படுகிறது.  இது போன்ற தோஷ தடைகளை நீங்க  பவானி கவசத்தை நாம் தினந்தோறும் படித்தோம்  என்றால் விரைவில் நம் மனதிற்கு ஏற்ற நல்ல கணவன், மனைவி அமைந்து  திருமணம் நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

அஸ்ய ஸ்ரீபவாநீகவச மந்த்ரஸ்ய பகவாந் மஹாதேவருஷி: ஆத்யா ஸக்தி: பவாநீ தேவதா ||
ஸ்ரீம் பீஜம், ஹ்ரீம் ஸக்தி: க்லீம் கீலகம், மம ஸமஸ்தகாமநா ஸித்த்யர்த்தே ஜபே
விநியோக:||

1. பவாநீ மே ஸிர: பாது லலாடம் பஞ்சமீ ததா |
நேத்ரே காமப்ரதா பாது முகம் புவநஸுந்தரீ ||

2. நாஸிகாம் நாரஸிம்ஹீ ச ஜிஹ்வாம் ஜ்வாலாமுகீ ததா |
ஸ்ம்ருதிரூபா ஜகத்தாத்ரீ கரௌ ஹ்ருத்பிந்து வாஸிநீ ||

3.  உதரம் மோஹதமநீ குண்டலீ நாபிமண்டலே |
பார்ஸ்வ ப்ருஷ்ட்ட கடீ குஹ்யம் குஹ்யஸ்த்தா ந நிவாஸிநீ ||

4. ஊரூ ஜங்கே ததாசைவ ஸர்வவிக்ந விநாஸிநீ |
ரக்ஷ ரக்ஷ மஹாமாயே பத்மே பத்மாலயே ஸிவே ||

5. வாஞ்ச்சிதம் பூரயித்ர்யாஸு பவாநீ பாது ஸர்வத |
ய இதம் கவசம் தேவ்யா: விஜாநாதி ஸ மந்த்ரவித் ||

6.  ராஜத்வாரே ஸ்மஸாநே ச பூதப்ரேதாபசாரகே |
பந்தநே ச மஹாதுக்கே பயே ஸத்ருஸமாகமே ||

7. ஸ்மரணாத் கவசஸ்யாஸ்ய லாப: ஸர்வத்ர ஜாயதே |
ப்ரயோக முபசாரம் ச பவாந்யா கர்த்து மிச்சதி ||

8.  கவசம் ப்ரபடேதாதெள தத: ஸித்தி மவாப்நூயாத் |
பூர்ஜபத்ரே லிகித்வா து கவசம் யஸ்து தாரயேத் ||

9. தேஹே ச யத்ர குத்ர ரபிஸர்வஸித்திர் பவேத் த்ருவம் |
ஸஸ்த்ராஸ்த்ரேப்யோ பயம் நைவ பூதாதிப்யோ பயம் ந ஹி ||

10. குருபக்திம் ஸமாஸாத்ய பவாந்யா: ஸ்தவநம் குரு |
ஸஹஸ்ரநாம படந கவசம்ரதமம் குரு ||

11. நந்திநே கதிதம் தேவி தவாக்ரே ச ப்ரகாஸிதம் |
 ஸாங்கதா ஜாயதே தேவி நாந்யதா கிரிநந்திநி ||

12.  இதம் கவச மஜ்ஞாத்வா பவாந்யா: ஸ்தௌதி யோ நர |
 கல்பகோடி ஸதேநாபி ந பவேத் ஸித்திதாயிநீ ||

- கவசம் தொடருவோம்
(அடுத்த இதழில் காயத்ரி கவசம்)