அபயம் அளிக்கும் அபிராமியன்னை-திருக்கடையூர்



தமிழக சக்தி பீடங்கள்

யமதர்மராஜனை அழித்து, மார்கண்டேயருக்கு என்றும் பதினாறாய் இருக்கும் சிரஞ்சீவித் தன்மை அளித்து கால சம்ஹார மூர்த்தியாக அருட்பாலிப்பவர் திருக்கடவூரில் (திருக்கடையூர்) உள்ள அமிர்தகடேஸ்வரர். எமபயத்தைக் கடக்க உதவும் ஊர் என்பதால் ‘கடவூர்’.திருக்கடையூர் என்றால், அமிர்தகடேஸ்வரரை அடுத்து அனைவரின் நினைவுக்கும் வருபவள் அன்னை அபிராமி. தன் பக்தனுக்காக அமாவாசை நாளில் முழு நிலவை வானில் தோன்றச் செய்த அற்புதம் நிகழ்த்தி ய தலம் இது. வானில் முழு நிலவு தோன்றியது.
மன்னன் உள்பட. சக்தி வழிபாடு என்பது மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டுடன் சம்பந்தப்பட்டது. அபிராமி பட்டர், “சௌந்தர்ய லஹரி”யை அபிராமி அந்தாதி என்று தமிழில் பாடினார். இது முழுவதும் மந்திர- தந்திர- யந்திர வழிபாடுதான்.

அன்னை அபிராமி மூன்றடி உயர பீடத்தில், நான்கு திருக்கரங்களுடன் கிழக்குப் பார்த்து நின்ற திருக்கோலத்தில் அருட்பாலிக்கிறாள். பாற்கடலில் கிடைத்த அமுதத்தை திருமால் தேவர்களுக்கு பகிர்ந்தளிக்குமுன், சிவபூஜை செய்தார்.சிவபூஜையின்போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி. எனவே, திருமால் தனது ஆபரணங்களைக் கழற்றி வைத்தார். அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார். திருமால் மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக நம்பிக்கை. அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், திருமாலை அபிராமியின் அன்னையாகவும் கருதலாம்!

அபிராமி அன்னையை, சரஸ்வதிதேவி பூஜித்து அருள் பெற்றுள்ளார். கருவறையின் பின்புறம் சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் தனிச் சந்நதிகள் உள்ளன. திருக்கடையூரில் இன்றும் அபிராமி பட்டர் வாழ்ந்த வீடு இருக்கிறது.

திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில், தை அமாவாசை அன்று இரவு 9 மணி அளவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்க அபிராமி பட்டர் உற்சவம் நடைபெறும். அப்போது அபிராமி அந்தாதி பாடப்படும். அப்போது அபிராமி அம்மன் நவரத்தின அங்கி அணிந்து வீற்றிருப்பாள். ஒவ்வொரு பாட்டின் நிறைவிலும் அபிராமி அம்மனுக்கு தங்கக் காசு சமர்ப்பித்து, தீபாராதனை செய்யப்படும். 79வது பாடலின்போது ஆலய கொடிமரத்தின் அருகில் பவுர்ணமி  தோன்றும் ஐதீகம் நடத்திக் காட்டப்படும்.

அபிராமி மிகவும் சக்தி வாய்ந்தவள். சக்தி பீடங்களில் இது காலபீடமாக போற்றப்படுகிறது.தன்னை வழிபடுபவர்களுக்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தை பாக்கியம், கல்வி கேள்விகளில் ஞானம் ஆகியவற்றை வாரி வழங்குகிறாள். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, அதை வாங்கி கட்டிக்கொண்டு, ஏற்கனவே கட்டியிருந்த தாலியை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். திருக்கடையூரில் பூர்ணாபிஷேகம் (100வயது பூர்த்தி), கனகாபிஷேகம் (90 வயது), சதாபிஷேகம், பீமரதசாந்தி, மணிவிழா மற்றும் ஆயுள் நீடிக்க யாகம் செய்து கொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. இந்த திருமணத்தின்போது 16 கலசங்கள் வைத்து, அருகில் நவதானியங்களில் நவகிரகங்களை ஆவாகனம் செய்து, ஹோமம் செய்கின்றனர். கலசங்களில் உள்ள புனித நீரை உறவினர்களைக் கொண்டு, தம்பதியர் மீது ஊற்றுகிறார்கள். இவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கிவிடுவதாக நம்பிக்கை.

எம சம்ஹாரம் - சித்திரை மாதம் - 18 நாட்கள் - மகம் நட்சத்திரத்தன்று இத்திருவிழா சிறப்பாக இத்தலத்தில் நடக்கும். தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும் - 6 ம் நாள் அன்று கால சம்ஹார மூர்த்தி ஒரே ஒரு முறை வெளியே வரும். கார்த்திகை - சோம வாரம் 1008 சங்காபிஷேகம் இத்தலத்தில் மிக சிறப்பாக நடைபெறும் என்பது குறிப்படத்தக்கது. புரட்டாசி நவராத்திரி, மார்கழி மாதம் விதிபாதம் அன்று ஏக தின உற்சவம் இங்கு சிறப்பாக நடக்கும்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருட்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் ஆறு படைவீடு இருக்கிறது. இங்குள்ள அம்பாள் அபிராமி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்.

இவளை வழிபடுவோர்க்கு செல்வ செழிப்பு, கல்யாண வரம், குழந்தைவரம் , கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் ஆகியவற்றை தருகிறாள். இத்தல மூர்த்தியான காலசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

உடல் பலம் பெறும். நோய் நொடி விலகும். எமபயம் அண்டாது. அம்மனுக்கு புடவை சாத்துதலும்,அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திக்கடன்களாக உள்ளது. மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிேஷகம் செய்யலாம். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள், புதுத் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜித்து, கட்டிக்கொண்டு, ஏற்கனவே கட்டியிருந்த தாலியை காணிக்கையாக செலுத்துகின்றனர். சீர்காழியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் வழியில் இத்தலம் அமைந்துள்ளது.