பைரவ வாகனம்



மனிதனுக்குத் துணையாக இருக்கும் விலங்குகளில் நாய் முதன்மை பெற்றதாகவும், காடுகளில் வாழ்வைத் தொடங்கிய காலம் முதல் இன்றும், இனியும் கூட  மனிதனுக்குக் காவல் புரியும் விலங்காக இருப்பது நாயேயாகும். நாயைக் காவல் தெய்வமாகவும் போற்றுகின்றனர். அதியுன்னதக் காவல் தெய்வமாக விளங்கும்  பைரவர் (க்ஷேத்ரபாலர் நாயை வாகனமாகக் கொண்டிருக்கிறார்.

அது வேட்டையாடும் உயர்ந்த நாயாகும். விடைத்த காதுகளும், சுருண்ட வாலையும் கொண்டதாக இருக்கும். இந்த நாயின் கால்கள் நீண்டு உறுதியானதாக  இருக்கிறது. பைரவருக்கு நாய் வாகனமாக இருந்தாலும் கோயில்களில் நாய்வாகனம் அமைக்கப்படுவதில்லை. பைரவரை குதிரையில் அமர்த்தி உலாவரச்  செய்வதே வழக்கமாகும். அண்மைக் காலத்தில் சேலத்திற்கு அருகேயுள்ள ஆறகழூரில் க்ஷேத்ரபாலரான பைரவர் அஷ்டமி நாளில் ஆலயத்திற்குள் வலம்  வருவதற்கென்று மரத்தாலான சிறிய நாய்வாகனம் செய்து வைக்கப்பட்டுள்ளது.