லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சரஸ்வதி



நிஜ ஸல்லாப மாதுர்ய
விநிர்பர்த்ஸித கச்சபீ

ஸௌந்தர்ய லஹரி ‘விபஞ்ச்யா காயந்தீ’ இந்தப் பாடலின் கருவே இந்த நாமாவில் வைக்கப்பட்டுள்ளது. ஸரஸ்வதி தேவியின் ‘கச்சபி’ என்ற வீணையில் மழலை போன்ற அக்ஷர ஒலியுடன் கூடிய ஸ்வர ஒலி கேட்கும். மற்ற வீணைகளில் ஸ்வர ஒலி மாத்திரமே கேட்கும். சரஸ்வதி வீணையில் பாடுகிறாள். தேவி அதனால் மகிழ்ந்து பாராட்டுகிறாள். அம்பாள் மகிழ்ந்து ‘ஸாது’ என்று சொன்னவுடன் அந்த ஸாது வசனத்தின் இனிமையின் முன்பு வீணையின் இனிமை மதிப்பிழந்து விட்டதால் சரஸ்வதி வீணையை உரையைப் போட்டு கட்டி வைத்துவிட்டாள்’.

லலிதா ஸஹஸ்ரநாமத்தில் சரஸ்வதி
கேயசக்ர ரதாரூட மந்திரிணீ பரிஸே விதா

கேயசக்ரம் என்னும் ேதரில் ஏறியமர்ந்த மந்திரிணிதேவி அம்பாளை வழிபட்டு வருகிறாள். ப்ரஸித்தமான சங்கீத உருவான தட்டு்த்தேர், அதில் அமர்ந்து மந்த்ரிணி தேவி,  வித்யா உபாஸ கர்களான யோகினிகளால் வணங்கப்பட்டு வருகிறாள். ஒரு கையில் வீணை, ஒரு கையில் கிளி உண்டு மதங்கரின் புதல்வியான இந்த மாதங்கி இனிய கானம், வாக் சக்தி மனோவசீகரம் இவற்றை அருள்வாள். மனமடங்கி புத்தி தெளிந்திருக்கும் போது மனனம் செய்யப்பட்ட மந்த்ரங்கள் மனத்தில் தேவி வடிவைப் பதிக்கும். இந்த நிலையே மந்திரிணி என்ற இந்த தேவியாவாள்.