ஏழு கற்களே சப்த கன்னியர்கள்!



ஆடி பதினெட்டு அன்று, கொங்கு நாட்டுப் பெண்கள் ‘கன்னிமார் படையல் பூஜை’ கொண்டாடுகிறார்கள். ஏழு கூழாங்கற்களை சப்த கன்னியராக பாவிக்கிறார்கள். அந்தக் கற்களில் சப்த கன்னியரை ஆவாகனம் செய்து, அவற்றை அலங்கரித்து, பூஜை செய்து, பொங்கல் நைவேத்யமும் செய்கிறார்கள்.

‘நந்திவாய்’ நதி!

புனேயிலிருந்து எழுத்தைந்தாவது கிலோ மீட்டரில் ‘டாகினி பீம சங்கரம்’ என்ற ஸ்தலம் உள்ளது. இங்குதான் பீமசங்கர் லிங்கம் உள்ளது. பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் இதுவும் ஒன்று. கோயிலை ஒட்டியே பீமாநதி உற்பத்தியாகி, கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து ஒரு நந்தியின் வாய் வழியாக வரும் அபூர்வக் காட்சியை இங்கு காணலாம். இந்த நீரை எடுத்துத்தான் பீமசங்கரருக்கு அபிஷேகம் செய்கின்றனர்.

பிறவிப்பிணி தீர்க்கும் தலம்!

சீர்காழி திருப்பனந்தாள் பேருந்து தடத்தில் உள்ள பந்தநல்லூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சோழிய விளாகத்தில் உள்ளது சாமுண்டீஸ்வரர் ஆலயம். முற்பிறவியில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு சிலந்தி சிவபூஜை செய்து மறுபிறவியில் ஈசனருளால் மன்னன் ேகாச்செங்கட் சோழன் ஆனான். எனவே இத்தலத்தை தரிசித்தால் பிறவிப் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.

நீர்வீழ்ச்சி விநாயகர்

கர்நாடக மாநிலத்தில் செர்செப்பா நீர்வீழ்ச்சியின் அருகே ஒரு விநாயகர் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் மேற்பகுதியில் காணப்படும் ஒரு துவாரம் வழியாக  அருவி நீர் நேரடியாக விநாயகர் மீது விழுகிறது. இப்படி அருவியே ஆனைமுகனை வணங்குவதால், இவர், ‘நீர்வீழ்ச்சி விநாயகர்’’ என்று அழைக்கப்படுகிறார்.

- ஆர்.ேக. லிங்கேசன்