அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?மொழி

Spoken  English  -  Part 5 ஏபீசி… நீ வாசி

‘‘1) நாம பேசினா யாரும் நம் தப்பைக்கண்டுபிடிக்கக் கூடாது. (Nobody should findout our mistake), 2) அப்படியே தவறைக் கண்டுபிடித்தாலும், கிண்டலடிக்கக் கூடாது. (Even if our mistakes are noted, he should not make fun of it), 3) நம்முடைய கேவலமான மொழிப் புலமையைக் கண்டு நம்மைவிட்டுப் பிரிந்து செல்லக்கூடாது. (He should not break our friendship because of our idiotic and erratic English), 4) முக்கியமா… ஆங்கிலத்தை தவிர நம் மொழியில் அவர்கள் பேசக் கூடாது.

(Last but not least, he should talk to us only in English). இந்த மாதிரியான நான்கு கண்டிஷன்களையும் ஏற்றுக்கொள்கிற ஒரே ஆள் திருவாளர் புத்தகம்” என்ற ரகுவை ரவி சற்றே குழப்பத்துடன் பார்த்தான்.

சிரித்துக்கொண்டே ரவியிடம் வந்த ரகு, “என்ன ரவி? குழப்பமா இருக்கா?... நல்லா யோசிச்சுப் பாரு. உதாரணமா Tenali Raman Tales என்ற புத்தகத்தை நீ நண்பனாக நினைத்துப் பார். நீ எப்ப வேணும்னாலும் அதை எடுத்துப் படிக்கலாம். நீ தப்பா படிக்கிறியா? சரியா படிக்கிறியா? என்று அந்த புத்தகம் கவலைப்படாது. கிண்டலடிக்காது. உலகமே தலைகீழாக மாறினாலும் அது உன்னிடம் ஆங்கிலம் தவிர வேறு மொழியில் பேசாது. உன்கூடவே இருக்கும். இதைவிட ஒரு சிறந்த நண்பனை நீ பெற முடியுமா என்ன?” என்றார்.

“I got it sir.(புரியுதுங்க சார்) You mean,(அதாவது) Reading is the only habit through which one can develop both Spoken and Written English.(“வாசித்தல்” என்ற பழக்கத்தின் மூலமாகத்தான் ஒருவன் ஆங்கிலத்தில் பேசுவதையும் எழுதுவதையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்) Am I right sir? (சரிங்களா சார்?)” என்ற ரவியிடம் “Absolutely Ravi.

You are right. (நீ நினைப்பது சரி. முழுக்க முழுக்க சரி) To add more spice,(இன்னமும் சொல்லப் போனா) you should hone your Listening and Reading skill, (நீ ‘கவனித்தல்’ மற்றும் ‘படித்தல்’ என்ற திறமைகளை பட்டை தீட்ட வேண்டும். Then automatically you would start Speaking and Writing. (பிறகென்ன!? சுயமாகவே பேசவும் எழுதவும் ஆரம்பித்து விடுவாய்)’’ என்றார் ரகு.                     
                                                                                   

(மீண்டும் பேசலாம்)

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு - mailto:englishsundar19@gmail.com & ‘salemsundar’ YouTube

சேலம் ப.சுந்தர்ராஜ்