வேலை ரெடி!வாய்ப்புகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் பகுதி. இந்த இரண்டு வாரங்களில் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் இங்கே...

என்.சி.சி. சான்றிதழுடன் டிகிரி முடித்தவர்களுக்கு ராணுவத்தில் வேலை!

நிறுவனம்: இந்திய ராணுவத்தில் என்.சி.சி தகுதி யுடையோருக்கான 46வது வேலைவாய்ப்பு அறிவிப்பு. இந்த வேலைகள் ஷார்ட் சர்வீஸ் கமிஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சிக்குப் பின் வழங்கப்படும்.
வேலை: வார்ட்ஸ் ஆஃப் பெட்டில் காஷுவாலிட்டி உட்பட சில துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 55. இதில் ஆண்களுக்கு 50, பெண்களுக்கு 5 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: என்.சி.சி. சான்றிதழுடன் டிகிரி முடித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: 21 முதல் 25 வரை
உடல் தகுதி: உயரம் மற்றும் எடை சரிபார்க்கப்படும்
தேர்வு முறை: நேர்முகம் மற்றும் மருத்துவ சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 7.2.19
தகவல்களுக்கு: www.joinindianarmy.nic.in

+2 முடித்தவர்களுக்கு முப்படைகளில் அதிகாரி பணி!

நிறுவனம்: மத்திய பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. நேஷனல் டிஃபன்ஸ் அகாடமி, மற்றும் நேவல் அகாடமிக்கான வேலைவாய்ப்புக்கான தேர்வை அறிவித்திருக்கிறது
வேலை: முப்படைகளில் அதிகாரிகள் தரத்திலான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 392. இதில் ராணுவம் 208, நேவி 42, ஏர்ஃபோர்ஸ் 92 மற்றும் நேவல் அகாடமியில் 50 இடங்கள் காலியாக உள்ளன
கல்வித் தகுதி: ராணுவத்துக்கு ஏதோ ஒரு பிரிவில் +2 படிப்பு. மற்ற வேலை
களுக்கு +2 படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்கள் எடுத்து படித்திருக்கவேண்டும்
வயது வரம்பு: 2.7.2000 - 1.7.2003 இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருத்தல் வேண்டும்
தேர்வுமுறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.2.19
தகவல்களுக்கு www.upsc.gov.in

எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் வேலை!

நிறுவனம்: மத்திய அரசின் கீழ் இயங்கும் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வு நிறுவனமான எய்ம்ஸ், ராய்ப்பூர் கிளை
வேலை: சீனியர் ரெசிடெண்ட் எனும் மருத்துவர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 143
கல்வித் தகுதி: மருத்துவப் படிப்பில் முதுகலை, முதுகலை டிப்ளமோ, டெண்டல் சர்ஜரியில்
முதுகலை
வயது வரம்பு: 37க்குள்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.2.19
தகவல்களுக்கு: http://www.aiimsraipur.edu.in

ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் ஆசிரியர் பணி!

நிறுவனம்: மத்திய அரசு நாடு முழுவதும் நடத்திவரும் நவோதயா வித்யாலயா
பள்ளிகளின் உத்தரப்பிரதேசக் கிளை
யில் வேலை
வேலை: பிரின்சிபால், ஆபிஸ் அசிஸ்டென்ட், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போன்ற வேலைகளில் காலியிடங்கள் இருந்தாலும் முதுகலை படித்த ஆசிரியர்களுக்கு அதிகபட்ச வேலைகள் உள்ளன
காலியிடங்கள்: மொத்தம் 251. இதில் முதுகலை படித்த குரூப் பி அடிப்படையிலான ஆசிரியர்கள் வேலை மட்டுமே 218 உண்டு. இந்த ஆசிரியர் வேலை பல பாடப்பிரிவுகளில் இருக்கிறது
கல்வித் தகுதி: ஆசியர் வேலைக்கு ஆசிரியர் பயிற்சியில் பி.எட்., டிகிரி மற்றும் முதுகலைப் படிப்பு
வயது வரம்பு: 60க்குள்
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 15.2.19
தகவல்களுக்கு: www.nvshq.org

ஜோத்பூர் எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் கிளர்க் பணி!

நிறுவனம்: மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வுக்கான எய்ம்ஸ் மருத்துவமனையின் ராஜஸ்தான் ஜோத்ப்பூர் கிளை
வேலை: மருத்துவம் சாராத சில பிரிவுகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 119. இதில் ஸ்டோர் கீப்பர் 21, ஸ்டோர் கீப்பர் கம் க்ளர்க் 85 இடங்கள் இருக்கிறது.
கல்வித் தகுதி: மேற்சொன்ன இருவேலைகளுக்குமே டிகிரி அவசியம்
வயது வரம்பு: முதல் வேலைக்கு 18 முதல் 35 வரை. இரண்டாம் வேலைக்கு 30க்குள். சில பிரிவினருக்கு வயது தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 4.2.19
தகவல்களுக்கு: www.aiimsjodhpur.edu.in

ஏர் இந்தியாவில் ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் பணி!

நிறுவனம்: ஏர் இந்தியா எஞ்சினியரிங் சர்வீசஸ் லிமிடெட் எனும் மத்திய அரசு நிறுவனம்
வேலை: ஏர்கிராஃப்ட் மெயின்டனன்ஸ் எஞ்சினியர் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 70. இதில் கேரளாவில் 64, நாக்பூரில் 6 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி: பிளஸ் 2 படிப்பை இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் முடித்திருக்க வேண்டும். இவை தவிர சி.ஏ.ஆர்., 66 சி.ஏ.டி., பி1/பி2 லைசென்ஸ்களை பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 55க்குள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 11.2.19
தகவல்களுக்கு http://www.airindia.in/writereaddata/Portal/career/697_1_Advertisement-for-AMEs_-TRV-NAG.pdf