ஐ.ஐ.எம்-ல் முதுநிலை சான்றிதழ் படிப்பு மாணவர் சேர்க்கை!
வாய்ப்பு
 இந்தியாவில் உள்ள சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்று இந்தூரில் உள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’(ஐ.ஐ.எம்.,) கல்வி நிறுவனம். இதில் முதுநிலை சான்றிதழ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வழங்கப்படும் படிப்பு
போஸ்ட் கிராஜூவேட் சர்டிபிகேட் புரோகிராம் இன் ஃபினான்ஸ் (பி.ஜி.சி.பி.எஃப்.,) - ஓர் ஆண்டு காலம்.
தேவையான தகுதிகள்
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இளநிலை பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது 2 ஆண்டுகள் துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சி.ஏ., ஐ.சி.டபிள்யூ.ஏ., சி.எஸ்., சி.எப்.ஏ., சி.எப்.பி., போன்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கு இந்த 2 ஆண்டு பணி அனுபவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
ஐ.ஐ.எம்., இந்தூரின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நேரடியாகக் கல்வி நிறுவன முகவரிக்கே பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். விண்ணப்பிக்கக் கடைசி நாள் 31.3.2019. மேலும் முழுமையான விவரங்களுக்கு www.iimidr.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
|